தமிழோவியம்
சிறுகதை : ஹை டெக் மாப்பிள்ளை
- தி.சு.பா.

எனக்குக் கல்யாண ஆசை வந்துவிட்டது! 25 வயது நடக்கிறது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அதெல்லாம் பத்தாம் பசலித்தனம். ஒரு கோழையை காதலித்ததில் சில பிரச்சினைகள் வந்ததால் காதல் திருமணத்திலும் உடன்பாடு இல்லை. ரொம்ப குழப்புவதாக எண்ண வேண்டாம். கடந்த ஒரு மாதமாக 'மேட்ரிமோனி' வெப்சைட்கள் (வலை முகவரி) பலவற்றில் வலை வீசி தேடி, எனக்கே எனக்கான, என்னுடைய குணாதிசியங்களுக்கு ஏற்ற மாதிரி இரண்டு நபர்களைத் தேர்ந்து எடுத்து வைத்திருக்கிறேன்.

மேலோட்டமாக, இரண்டு பையன்களுமே நல்லவர்களாக தெரிகிறார்கள். எனக்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவனை விரைவில் தேர்ந்தெடுத்து, மின்னஞ்சல் செய்ய வேண்டும். இல்லையென்றால், வேறு யாராவது தட்டிச் சென்று விடுவார்கள். இந்த இரண்டு நபரில் யார் என் வாழ்க்கை நாயகன்? இதில் தான் குழப்பம்! எனக்கு இந்த ஜாதகம், ஜோஸ்யம் இதில் எல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை. தீவிர யோசனைக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்தேன். நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். இன்றைய தேதியில் - 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் - பாதி உலகை ஆள்வது கணினியே! கூடிய விரைவில் மீதி உலகமும் கணினியின் கட்டுக்குள் வந்து விடும். அதனால், ஒரு 'சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்' ('நிரல்') எழுதி மாப்பிள்ளையைத் தேர்ந்து எடுப்பதாக முடிவெடுத்து விட்டேன். இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தவிர, இந்த பெண் பார்க்கும் படலம், அதைச் சுற்றி நடக்கும் கேலிகூத்துக்கள் இதெல்லாம் இந்த 21ம் நூற்றாண்டிலும் தேவை தானா?

முதலில், நிரல் உரிமம் மற்றும் நிபந்தனைகள்:

      1) விண்டோஸில் மட்டும் தான் நிரல் வேலை செய்யும் என்பதால், உங்கள் அறையில் குறைந்தபட்சபம் இரண்டு விண்டோவாவது இருக்க வேண்டும்.
      2) உங்கள் அருகில் உங்கள் பெற்றோர் இருந்தால் நிரல் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.
      3) இந்த நிரலை ஓட்டி பார்க்கும்பொழுது கண்டிப்பாக சொஜ்ஜி-பஜ்ஜி சாப்பிட வேண்டும்.
      4) மென்பொருள் சோதனை (டெஸ்டிங்) செய்பவர் யாரும் கண்டிப்பாக உங்களுடன் இருக்கக் கூடாது. இருந்தால் நிரலை உங்களால் திறக்கவே முடியாது.
      5) திட்டப்பணி மேலாளர் (ப்ராஜக்ட் மேனேஜர்) யாரும் நீங்கள் இருக்கும் அறையிலேயே இருக்கக்கூடாது. இருந்தால் நிரல் வேலை செய்யாது. குறை சொல்வதற்கே பிறந்தவர்கள். கவனம் அவசியம்.
      6) நீங்கள் 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருந்தால் மட்டுமே நிரல் வேலை செய்யும்.
      7) இதன் விலை ரூபாய் 1000 மட்டுமே. இணையம் மூலம் வாங்குபவர்க்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு. நிரலை www.hitechmaapu.com ல் வாங்கலாம்.
      8) கல்யாண சீசன் இல்லாத மாதத்தில் வாங்கினால் மேலும் 10% சிறப்புத் தள்ளுபடி.
      9) உங்கள் மனங்கவர் துணைவனை இந்நிரல் மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்தபின், உங்கள் நண்பர்களுக்கெல்லாம் கண்டிப்பாக ட்ரீட் தருவீர்களானால், 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். தள்ளுபடி பெற, ட்ரீட் பில்லை (ஒரிஜினல்) எங்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும்.
      10) நிரல் உரிமம் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். அதைத் திருட்டுத்தனமாக உபயோகித்தால் தவறான மாப்பிள்ளையைப் பரிந்துரைத்து விடும். அப்புறம் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான். உங்கள் வாழ்க்கையில் நீங்களே விளையாடிவிடாதீர்கள்!

நிரல் ஆரம்பம்()
{
        செயல்கூறு1 முழுஎண் படிப்புப்பொருத்தம் (படிப்புத்தகுதி சரம், கல்லூரி சரம்)
        {
               படிப்புத்தகுதி == "+2" எனில்
                     வழங்கு 10 புள்ளி;

               படிப்புத்தகுதி == "இளங்களை" மற்றும் கல்லூரி == "கலை" எனில்
                     வழங்கு 20 புள்ளி;

               படிப்புத்தகுதி == "இளங்களை" மற்றும் கல்லூரி == "பொறியியல்" எனில்
                     வழங்கு 30 புள்ளி;

               படிப்புத்தகுதி == "முதுகளை" எனில்
                     வழங்கு 40 புள்ளி;              
              
               வழங்கு 0 புள்ளி;

        }

        செயல்கூறு2 முழுஎண் சம்பளப்பொருத்தம் (சம்பளம் முழுஎண்)
        {
               சம்பளம் > 10000 மற்றும் சம்பளம் <= 15000 எனில்
                     வழங்கு 10 புள்ளி;

               சம்பளம் > 15000 மற்றும் சம்பளம் <=25000 எனில்
                     வழங்கு 20 புள்ளி;

               சம்பளம் > 25000 மற்றும் சம்பளம் <= 35000 எனில்
                     வழங்கு 30 புள்ளி;

               சம்பளம் > 35000 மற்றும் சம்பளம் <= 50000 எனில்
                     வழங்கு 40 புள்ளி;

               சம்பளம் > 50000 மற்றும் சம்பளம் <= 100000 எனில்
                     வழங்கு 40 புள்ளி;

               சம்பளம் > 100000 எனில்
                     வழங்கு 50 புள்ளி;

               வழங்கு -50 புள்ளி;
        }

        செயல்கூறு3 முழுஎண் தொழில்பொருத்தம் (தொழில் சரம், துறை சரம்)
        {
            
               தொழில் != "பொறியியல்" எனில்
                     வழங்கு 10 புள்ளி;

               தொழில் == "பொறியியல்" மற்றும் துறை == "இயந்திரவியல்" எனில்
                     வழங்கு 20 புள்ளி;

               தொழில் == "பொறியியல்" மற்றும் துறை == "கட்டுமானம்" எனில்
                     வழங்கு 30 புள்ளி;

               தொழில் == "பொறியியல்" மற்றும் துறை == "வேதியியல்" எனில்
                     வழங்கு 40 புள்ளி;

               தொழில் == "பொறியியல்" மற்றும் துறை == "வன்பொருள்" எனில்
                     வழங்கு 50 புள்ளி;

               தொழில் == "பொறியியல்" மற்றும் துறை == "மென்பொருள்" எனில்
                     வழங்கு 100 புள்ளி;

               வழங்கு 0 புள்ளி;
        }

        செயல்கூறு4 முழுஎண் வாகனப்பொருத்தம் (வாகனம் சரம், நிறுவனம் சரம், இன்ஜின் சரம்)
        {
               வாகனம் == "சைக்கிள்" அல்லது (வாகனம் == "இரு சக்கர வாகனம்" மற்றும் இன்ஜின் == "50 CC") எனில்
                     வழங்கு 10 புள்ளி;

               வாகனம் == "இரு சக்கர வாகனம்" மற்றும் (இன்ஜின் > "100 CC" மற்றும் இன்ஜின் <= "125 CC") எனில்
               {
                     நிறுவனம் == "யமஹா" எனில்
                           வழங்கு 20 + 5 புள்ளி;
                     நிறுவனம் == "ஹீரோ ஹோண்டா" எனில்
                          வழங்கு 20 + 10 புள்ளி;
                     இல்லையெனில்,
                            வழங்கு 20 புள்ளி;
               }

               வாகனம் == "இரு சக்கர வாகனம்" மற்றும் இன்ஜின் >= "125 CC"
               {
                     நிறுவனம் == "ஹீரோ ஹோண்டா" எனில்
                          வழங்கு 30 + 10 புள்ளி;
                     நிறுவனம் == "பஜாஜ்" எனில்
                           வழங்கு 30 + 10 புள்ளி;
                     இல்லையெனில்,
                            வழங்கு 30 புள்ளி;
               }

               வாகனம் == "கார்" மற்றும் நிறுவனம் == "மாருதி" எனில்
                     வழங்கு 40 புள்ளி;

               வாகனம் == "கார்" மற்றும் நிறுவனம் == "ஃபோர்ட்" எனில்
                     வழங்கு 40 + 5 புள்ளி;

               வாகனம் == "கார்" மற்றும் நிறுவனம் == "ஹோண்டா" எனில்
                     வழங்கு 40 + 10 புள்ளி;

               வாகனம் == "கார்" மற்றும் நிறுவனம் == "ஸேன்ட்ரோ" எனில்
                     வழங்கு 40 + 20 புள்ளி;

               வாகனம் == "கார்" மற்றும் (நிறுவனம் == "பி.எம்.டபிள்யூ" அல்லது நிறுவனம் == "பென்ஸ்") எனில்
                     வழங்கு 100 புள்ளி;

               வழங்கு -25 புள்ளி;
        }

        செயல்கூறு5 முழுஎண் குணப்பொருத்தம் (குணம் சரம்)
        {
            
               குணம் != "புகை பழக்கம்" எனில்
                     வழங்கு -50 புள்ளி;

               குணம் != "குடி பழக்கம்" எனில்
                     வழங்கு -100 புள்ளி;

               குணம் != "போதை பழக்கம்" எனில்
                     வழங்கு -200 புள்ளி;

               குணம் != "பெண் சகவாசம்" எனில்
                     வழங்கு -500 புள்ளி;

               வழங்கு 10 புள்ளி;
        }


        செயல்கூறு6 முழுஎண் வீடுபொருத்தம் (வீடு சரம், அறை முழுஎண்)
        {
               வீடு == "வாடகை வீடு" எனில்
                   வழங்கு -20 புள்ளி;

               வீடு == "பூர்வீக வீடு" எனில்
                   வழங்கு 10 புள்ளி;
 
               வீடு == "அடுக்ககம்" மற்றும் அறை = 1 எனில்
                   வழங்கு 20 புள்ளி;

               வீடு == "அடுக்ககம்" மற்றும் அறை = 2 எனில்
                   வழங்கு 30 புள்ளி;

               வீடு == "அடுக்ககம்" மற்றும் அறை = 3 எனில்
                   வழங்கு 40 புள்ளி;

               வீடு == "தனிவீடு" எனில்
                   வழங்கு 50 புள்ளி;

               வழங்கு 0 புள்ளி;
        }

        செயல்கூறு7 முழுஎண் நாடுபொருத்தம் (வசிக்கும்நாடு சரம்)
        {
               வசிக்கும்நாடு == "இந்தியா" எனில்
                   வழங்கு 10 புள்ளி;

               வசிக்கும்நாடு == "ஆஸ்திரேலியா" எனில்
                   வழங்கு 20 புள்ளி;

               வசிக்கும்நாடு == "பிரான்ஸ்" எனில்
                   வழங்கு 30 புள்ளி;

               வசிக்கும்நாடு == "ஜெர்மனி" எனில்
                   வழங்கு 40 புள்ளி;

               வசிக்கும்நாடு == "ஸ்விட்சர்லாந்து" எனில்
                   வழங்கு 50 புள்ளி;

               வசிக்கும்நாடு == "அமெரிக்கா" எனில்
                   வழங்கு 100 புள்ளி;

               வழங்கு 0 புள்ளி;
        }

       முதன்மை செயல்கூறு ()
       {
           முழுஎண் வரன்1மதிப்பெண் = 0;
           முழுஎண் வரன்2மதிப்பெண் = 0;
         
           வரன்1மதிப்பெண் = படிப்புப்பொருத்தம்("இளங்களை","பொறியியல்");
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + சம்பளப்பொருத்தம்(50000);
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + தொழில்பொருத்தம்("வேதியியல்");
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + வாகனப்பொருத்தம்("கார்","மாருதி");
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + குணப்பொருத்தம்("நல்லவன்");
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + வீடுபொருத்தம்("அடுக்ககம்",2);
           வரன்1மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + நாடுபொருத்தம்("இந்தியா");

           வரன்2மதிப்பெண் = படிப்புப்பொருத்தம்("முதுகளை");
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + சம்பளப்பொருத்தம்(70000);
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + தொழில்பொருத்தம்("மென்பொருள்");
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + வாகனப்பொருத்தம்("கார்","ஸேன்ட்ரோ");
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + குணப்பொருத்தம்("புகை");
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + வீடுபொருத்தம்("அடுக்ககம்",3);
           வரன்2மதிப்பெண் = வரன்1மதிப்பெண் + நாடுபொருத்தம்("அமெரிக்கா");

           வரன்1மதிப்பெண் > வரன்2மதிப்பெண் எனில்
                    சிறந்தது முதல் வரனே!
           இல்லையெனில்
                    சிறந்தது இரண்டாவது வரனே!
       }
};

நான் பாலாஜியை என் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன்! அவனைத்தான் சிறந்தவனாக இந்த நிரல் என்னிடம் பரிந்துரைத்துள்ளது.

இறுதியாக, நிரலில் ஏதாவது பிழை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. மனிதன் என்றால் குறை, நிரல் என்றால் பிழை! அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்கு இல்லையென்றாலும், உங்கள் தோழிகளுக்காகவாவது நான் எழுதிய நிரலை பரிந்துரை செய்யுங்களேன்!

பி.கு. : இந்த நிரல் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுத்தால், எனக்கு திசுபா@ஹைடெக்மாப்பு.காம் முக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஹனிமூன் பற்றி முடிவெடுப்பதற்காக நிரல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors