தமிழோவியம்
பாப் கவிதைகள் : நான் உன்னை காதலிக்கிறேன்
- சிறில் அலெக்ஸ்

அருமையான இந்த பாப் பாடலை தமிழில் மொழிபெயர்க்கும் ஆர்வத்தில்...

'நான் உன்னை காதலிக்கிறேன்', எனும்
வார்த்தைகளை நான்
உன்னிடமிருந்து கேட்க விரும்பவில்லை.
அந்த வார்த்தைகளை நீ
சொல்வதில் எனக்கு
விருப்பமில்லை என்பதால் அல்ல.
உன் உண்மையான உணர்வுகளை
எனக்கு
வார்த்தைகளுக்கும் மேலாய் காண்பிப்பது
எத்தனை எளிதென
உனக்குத் தெரிந்திருந்தால்?
'காதலிக்கிறேன்' என
நீ சொல்லத் தேவையிருக்காது,
எனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

என் இதயம்
இரண்டாய் கிழிந்திருந்தால் என்ன செய்வாய்?
வார்த்தைகளுக்கும் மேலாய்
உன் காதல் உண்மை என என்னை
உணரவைக்க என்ன செய்வாய்?
அந்த வார்த்தைகளை நான்
பிடுங்கிவிட்டால் என்ன சொல்வாய்?
அப்போது,
'காதலிக்கிறேன்' எனும்
சொல்லால் நிலமைகளை
புதுப்பிக்க இயலாது உன்னால்.

உன்னோடு பேசி
உனக்குப் புரியச் செய்ய முயன்றேன்
நீ செய்யவேண்டியதெல்லாம்
உன் கண்களை மூடிக்கொள்
உன் கைகளை நீட்டி என்னைத் தொடு
என்னை உன் அருகே அணைத்துக்கொள்
ஒருபோதும் என்னைப் போக விடாதே
வார்த்தைகளுக்கும் மேலான
உன் காதலையே வேண்டுகிறேன்.
அப்போது
'காதலிக்கிறேன்' என
நீ சொல்லத் தேவையிருக்காது,
எனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.


Saying I love you
Is not the words I want to hear from you
Its not that I want you
Not to say, but if you only knew
How easy it would be to show me how you feel
More than words is all you have to do to make it real
Then you wouldnt have to say that you love me
Cos Id already know

What would you do if my heart was torn in two
More than words to show you feel
That your love for me is real
What would you say if I took those words away
Then you couldnt make things new
Just by saying I love you

More than words

Now Ive tried to talk to you and make you understand
All you have to do is close your eyes
And just reach out your hands and touch me
Hold me close dont ever let me go
More than words is all I ever needed you to show
Then you wouldnt have to say that you love me
Cos Id already know

What would you do if my heart was torn in two
More than words to show you feel
That your love for me is real
What would you say if I took those words away
Then you couldnt make things new
Just by saying I love you

More than words

Copyright © 2005 Tamiloviam.com - Authors