தமிழோவியம்
கவிதை : தமிழ்த் தாத்தா!
- சிதம்பரம் அருணாசலம்

U.Ve. Swaminatha Iyer

செப்பிடும் வார்த்தைகள் சுவைபெற
ஒப்பிடும் பெருங் காப்பியங்களை,
ஓலைசுவடிக்குள்ளிருந்து உயிர்ப்பித்து
பாலையாய்ப் போய்விடாது - தமிழ்
மாலை தொடுப்பதன்
தலையாய காரணப் பொருளே!

தமிழுக்கு, தந்தைக்குத் தந்தையாய்
தனிப் பெருஞ்சுவையின் தாத்தாவாய்
இனி ஒரு கவலையில்லை என
தொகுப்பதில், இனித்திடும் வார்த்தைகளைத்
புகுத்திடும் திண்மைக்கு - வழி
வகுத்த வார்த்தைகளின் வள்ளலே!

நிறைவாய்த் தமிழை உயர்த்தியதாய்,
குறை குடங்களெல்லாம் கூத்தாடும் போது,
விளைச்சலைப் பெருக்க நீ விதைத்ததும்,
விழுக்காடு கேட்காமல் உழைத்ததும்
வீணர்களால் இங்கே மறைக்கப்பட்டது.
வேண்டிய புகழ் உனக்கு மறுக்கப்பட்டது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors