தமிழோவியம்
டெலிவுட் : மெட்டி ஒலியில் கேட்கப்போவது கெட்டி மேளம்தான்
- சில்லுண்டி

ராஜ் டிவியில் ஊர் வம்பு. ஓரு காலத்தில் நிறைய பேரை வம்புக்கு இழுத்த புரோகிராம். ரெண்டு பெண்மணிகள் போட்டி போட்டுக்கிட்டு நாட்டு நடப்புகளை பத்தி கமெண்ட் அடிப்பாங்க. அவ்வப்போது ஆட்களை மாற்றி புதுசு புதுசா வாண்டுகளிலிருந்து தொண்டு கிழங்கள் வரை எல்லோரையும் நிகழ்ச்சிக்குள் இழுத்துவந்து, ஆளுக்கொரு டயலாக் கொடுத்து....நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போ சனிக்கிழமை ராத்திரி வேற புரோகிராம் இல்லைன்னு சேனலை திருப்பினா உப்பு சப்பில்லாமல் தினத்தந்தியோட அஞ்சாம் பக்கத்தை கடகடவென்று மனப்பாடம் பண்ணி ஒப்பித்து கொண்டிருக்கிறார்கள். நிதியோ, தயாநிதியோ ஏதோ ஒரு பிரச்னை. நமக்கேன் வம்பு?!
 
விஷயம் தெரியாமல் ஏதாவது கேட்கணுமேங்கிறதுக்காக அரைகுறை தமிழில் எதையாவது கேட்டு வைக்கும் குஜால் காம்பியர் பார்ட்டிகள் இல்லை. நடுநடுவே கிளிப்பிங்ஸையும் விளம்பரத்தையும் திணிக்கும் எடிட்டர் இல்லை. பக்க வாத்தியம் எதுவுமில்லாமல் மனம் விட்டு பேசினார் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எஸ்.எஸ் டிவியில் ஐ, மீ, மைசெல்·ப் புரோகிராம். உட்லண்ட்ஸ் வாசலில் பார்ட்டியை ஓரங்கட்டியிருந்தால் கூட இவ்வளவு நிதானமாக பேசியிருக்கமாட்டார். ராமச்சந்திர உஷாக்கள் நிச்சயம் மிஸ் பண்ணியிருப்பார்கள். ஜெமினி கணேசனுக்கு மட்டுமல்ல சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு கூட நிறைய ஹிட் பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது பேட்டியை பார்த்தபிறகுதான் தெரிந்தது. யார், யார் எந்தெந்த இந்தி பாட்டை தமிழில் சுட்டுப் போட்டாங்கங்கிறது அன்னாருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அன்னாரிடம் கஜல் மேட்டர் நெறயா கீது, ஆசாத் கவனிக்க!

நம்மூரு சினிமாவில் பக்திப்படம்னா கிளைமாக்ஸில் ஆத்தாவை புகழ்ந்து ஒரு ஆட்டம் போடணும். அது ஏன் யாரும் ஆடாம கொள்ளாம சா·ப்டா ஒரு மெலடியை எடுத்து விடமாட்டேங்கிறாங்கன்னுதான் தெரியலை. பதில் தெரிஞ்சவங்க விவேக்குக்கு எழுதி அனுப்புனா அடுத்த பட காமெடி டிராக்குக்கு யூஸ் பண்ணிப்பாரு. இந்தபாட்டும் ஆத்தா பாட்டுதான். ஆனா கொஞ்சம் வித்தியாசம். ஆத்தாவை தூரமா வைச்சு கன்னத்தில போட்டுக்காம ஆத்தா கூடவே ஆடற மாதிரி ஜாலியா ஒரு ஆட்டத்தை எடுத்துவிட்டுருக்காங்க. கெஸ்ட் டான்ஸ் புகழ் சாயாசிங்கின் ஆட்டமும் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை நொந்துகொள்ளும் பாடல்வரிகளும் கவனிக்க வைக்குது. அம்மிணியின் குளோஸப் ஷாட் ரொம்ப அபூர்வமா கையில சிக்கினது. பார்த்துட்டு கன்னத்துல போட்டுக்கோங்கோ!

மெட்டி ஒலி முடியற நேரத்துலேயாவது அதைப்பத்தி சொல்லியே ஆகணும்னு நெஞ்சுல முழங்காலை வெச்சு.. (ஹி...ஹி.. சுசாதா ஸ்டைல்!) 810 எபிசோட்னா சும்மாவா? சிதம்பரம் செத்ததையே சன் நியூஸ்ல ப்ளாஷ் போட்டிருக்கலாம்! ஆளாளுக்கு அஞ்சு நாள் அழுதுட்டு இப்போ கடைசி பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணலேன்னா சீரியலை முடிக்க முடியாதுங்கிறதனால அவசர கோலத்துல வேலையை ஆரம்பிச்சுருக்காங்க. மதுரையிலிருந்து ஒரு வில்லங்கத்தை வரவழைச்சு....எப்படியோ கடைசி நாளன்னிக்கு மெட்டி ஒலியில் கேட்கப்போவது கெட்டி மேளம்தான். மாப்பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து ஒரு மாப்பிள்ளை பார்க்குறாங்களாம்... அது மேட்டர்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors