தமிழோவியம்
டிவி உலகம் : மொபைல் போனில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்!
- மூர்த்தி

சிங்கப்பூரில் உள்ள டி.வி.நிலையம் மொபைல் போனில் டி.வி. தொடர் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது. ஆசியாவிலேயே இது முதல் முறை ஆகும். 30 வாரம் சீன மொழியில் இந்தத்தொடர் ஒளிபரப்பாகும். இந்த மாதக்கடைசியில் இருந்து இந்தத் தொடர் தினமும் 3 நிமிடம் மட்டும் ஒளிபரப்பாகும். அடுத்த ஆண்டு முதல் 90 நிமிட டெலிவிஷன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 'பிளீஸ் ஐ லவ் யூ' என்ற தலைப்பில் இப்போது ஒளிபரப்பாக இருக்கும் இந்தத் தொடரில் தைவான் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மீடியாகார்ப் என்ற சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான இந்த டி.வி. நிலையம் 10 டி.வி. தொடர்களை மொபைல் போனில் ஒளிபரப்புவதற்காக தயாரிக்க இருக்கிறது.

இந்த திட்டம் வெற்றிபெற்றால் மற்ற மொழிகளிலும் தொடர்கள் ஒளிபரப்பப்படும் என்று பேச்சாளர் கூறினார். இனிவரும் காலங்களில் "செல்வி" பார்த்து மூக்கை சிந்த தொலைக்காட்சி தேடி ஓடவேண்டியதில்லை! உட்கார்ந்த இடத்திலேயே சிந்தலாம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors