தமிழோவியம்
உ. சில புதிர்கள் : ஃபிராய்டு கோட்பாடு
- முத்துராமன்

கடந்த வாரம் சொன்னது போல ஆளுமைக் கோளாறுகளைப் பார்ப்பதற்கு முன் ஃபிராய்டு பற்றிய சில விஷயங்களைப் பார்த்துவிடுவது நல்லது. கடைசியாக ஆளுமைக் கோளாறும் சில வகைகளும்.

முதலில் ஃபிராய்டும் அவருடைய கோட்பாடும்.
 
ஃபிராய்டின் கோட்பாட்டில் முக்கியமான விஷயம் செக்ஸ்.

இதுதான் அவருக்கும் அவருக்குப் பிறகு வந்தவர்களுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம். ஃபிராய்டின் இந்தக் கருத்தில் ஏற்பட்ட முரண்பாட்டில்தான், அவருக்குப் பின் வந்தவர்கள் அவருடைய கோட்பாட்டுக்கு எதிராக  தங்களுடைய சொந்தக் கோட்பாடுகளை வெளியிட்டனர். அப்படி என்னதான் சொல்லிவிட்டார் ஃபிராய்டு?

அவர் சொன்னதெல்லாம் அசிங்கமான வார்த்தைகள்தாம் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், இது உளவியல். மனிதனை உள்ளே சென்று பார்க்கக்கூடிய அறிவியல். அறிவியல் என்று வந்த பிறகு அசிங்கம் பார்க்க முடியுமா? சரி, ஃபிராய்டு என்ன சொன்னார்? "Penis Envy" என்று சொன்னார்.

பெண்களின் மனத்தில் அடிநாதமாக இருப்பதெல்லாம் ஆண்களின் மேல் அவர்கள் கொண்டுள்ள கோபம்தான். இதற்கு ஃபிராய்டு கொடுத்த விளக்கம், "ஆண்களுக்குக் கிடைத்திருக்கும் சலுகைகள், அனுகூலங்கள் தங்களுக்கு இல்லையே என்று பெண்கள் ஏங்குவதும், ஆசைப்படுவதும்தான்

அடிப்படைக் காரணம்". இந்த அடிப்படைக் காரணத்தைச் சொல்ல அவர் பயன்படுத்திய வார்த்தை "Penis Envy".

ஃபிராய்டு தன்னிடம் வந்த பெண் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு, அந்தப் பெண்கள் கடுமையான செக்ஸ் வன்முறைக்கு ஆளானவர்கள் என்று தெரிந்து கொண்டார். அவர்களுக்கு நிகழ்ந்த துயரமான சம்பவங்களைக் கொண்டும் சமூகச் சூழலைக் கொண்டும் தம்முடைய

கோட்பாடுகளில் அவர் எந்தவிதமான கருத்துகளையும் சொல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை Penis Envy எனப்படும் உடல் ரீதியான காரணத்தை மட்டுமே சொல்ல முடிந்தது. Penis Envy - அதாவது ஆண்களைப் போல தங்களுக்கும் ஆண்குறி இல்லையே என்ற பொறாமைதான் பெண்களுடைய

ஏக்கங்களுக்கும், ஆசைகளுக்கும் காரணம் என்ற உடல் ரீதியான விளக்கத்தையே அவரால் தர முடிந்தது.

ஃபிராய்டின் கோட்பாடுகளைப் பொறுத்தவரை பெண்கள் புத்திகூர்மையுள்ள வேலைகளுக்கெல்லாம் சரிப்படாதவர்கள், இயல்பிலேயே வேஷம் போடக்கூடியவர்கள், வீண் பெருமைக்காரர்கள், சுய தம்பட்டம் அடிப்பவர்கள், மந்தத்தனமாக இருப்பவர்கள்... இப்படி அவர் சொல்லும் எல்லா

காரணங்களுக்கும் அடிப்படைக் காரணம் Penis Envy.

இத்தகைய கோட்பாடுகளிலிருந்து முரண்பட்டவர்கள்தாம் வெளியேறி தம்முடைய சொந்த கோட்பாடுகளை நிலைநாட்டினர்.

அவர்களில் முக்கியமான ஒரு சிலரைத் தொடர்ந்து பார்க்கலாம்.

C.G.Jung (1875 - 1961)

ஃபிராய்டின் முக்கியமான புத்தகமாகக் கருதப்படுவது Interpretation of Dreams. கனவுகளின் விளக்கம் என்ற அந்தப் புத்தகத்தால் கவரப்பட்டவர்தான் "கார்ல் G. யூங்". ஃபிராய்டுடன் கொஞ்ச காலம் இணைந்து பணியாற்றியவர் இந்த கார்ல் G. யூங். ஆனால், ஃபிராய்டின் கோட்பாடுகள் செக்ஸுக்கு

அதிக முக்கியத்துவம் தருவது பிடிக்காமல் போக, ஃபிராய்டுக்கு ஒரு good bye சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டார்.

வெளியே வந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? இவரே ஒரு தியரியைக் கொடுத்தார். Analytical Psychology என்று தன்னுடைய சிந்தனைகளை அள்ளி வீசினார். "the persons lives by aims as well as causes" என்ற தியரிதான் இவருடைய முக்கியமான தியரி.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய சின்னச் சின்ன ஒழுங்குமுறைகளால் ஆனதுதான் மனம் என்கிறார் கார்ல் G. யூங். மனத்தைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் பிரிவுகள் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய. ஆக, முக்கியமானவை மட்டும் இங்கு.

கலெக்டிவ் அன்கான்ஷியஸ் (The Collective Unconsious)

ஃபிராய்டுக்கும் கார்ல் G. யூங்குக்கும் உள்ள பெரிய வேறுபாடு இதுதான்.

மனிதன் விலங்கிலிருந்து தோன்றினான் என்பதில் ஆரம்பிக்கிறார் இவர். விலங்கு மூதாதையர்களிடமிருந்து ஆரம்பித்து ஆதி மனிதனாகப் பரிமாணமடைந்தது வரை கொண்ட எல்லா அனுபவங்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூளையில் சேர்த்து வைத்துக்

கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்த அனுபவங்கள் நவீன மனிதர்களிடம் வெளிப்படையக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆழ்மனத்தில் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்கிறார் கார்ல் G. யூங். அனிமா மற்றும் அனிமஸ் (The Anima and The Animus)

இது இன்னொரு முக்கியமான விஷயம். ஏற்கனவே சொன்ன மாதிரி ஒவ்வொருவருக்கும் எதிர் பாலினத்தவரின் தன்மைகள் உண்டு. ஆணிற்குள் இருக்கும் பெண் தன்மைக்கு அனிமா என்றும், பெண்ணிற்குள் இருக்கும் ஆண் தன்மைக்கு அனிமஸ் என்று குறிப்பிடுகிறார். அர்த்தநாரீஸ்வரர் சிலை உணர்த்துவது இதைத்தானோ?

இனி, ஆளுமைக் கோளாறுகள்.

ஆளுமைக் கோளாறு என்பது ஒருவருடைய ஆளுமை எப்போது அவருக்கும் மற்றவர்களுக்கும் சிக்கல்களைத் தருகிறதோ அதுவே ஆளுமைக் கோளாறு எனப்படுகிறது.  சில முக்கியமான ஆளுமைக் கோளாறுகள். இதனை மூன்று பிரிவுகளாகப் பிரித்து த்திருக்கின்றனர்.

1. வித்தியாசமாகக் காணப்படும் ஆளுமைக் கோளாறுகள்
2. விபரீதமாகக் காணப்படும் ஆளுமைக் கோளாறுகள்
3. அச்சம் தரக்கூடிய செயல்பாடுகள் கொண்ட ஆளுமைக் கோளாறுகள்.

இவற்றைப் பற்றியும் மேலும் சில உளவியல் வல்லுநர்களின் ஆலுமைக் கோட்பாடுகளைப் பற்றியும் அடுத்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors