தமிழோவியம்
கவிதை : பொன்னி அரிசியின் போறாத காலம்.
- சிதம்பரம் அருணாசலம்

திருட்டில் நூதனம்
இருட்டில் நடக்கவில்லை.
உணவிற்காகத் திருடுவது
உள்ள வழக்கம்.
பணத்திற்காகத் திருடுவது
பழக்கத்தில் சாதாரணம்.
வெட்கத்தைத் தொலைத்து விட்டு
உணர்வுகளைத் திருட நினைத்தது
ஆரம்பமான மண்ணை
அடியோடு அபகரித்த கதையானது.
மண்ணை வளமாக்கும்
காவிரியின் கைவண்ணத்துடன்
ஆடுதுறை நிலத்தில்
ஆராய்ச்சியில் விளைந்தது
மலேசிய மைந்தனிடம்
அடிமையாகிப் போனது.
இங்கே உள்ளவர்களுக்கு
பிள்ளைக்கும், பேத்திக்கும்
பதவிகளைப் பங்கு வைக்கவும்,
கூட்டாளிகளுடன் குலாவிக்
கொட்டமடித்துப் பின்
சட்டையைப் பிடிக்காத குறையாகச்
சண்டை போடவுமே
சரியாக இருக்கிறது.


(பொன்னி அரிசியின் ஏகபோக உரிமையை மலேசியாவில் உள்ள ஒருவர் காப்புரிமையாகப் பெற்றிருக்கிறார் என்று சன் தொலைக்காட்சியின் செய்தியில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுதியது)

Copyright © 2005 Tamiloviam.com - Authors