தமிழோவியம்
அறிவிப்பு : இந்த வருட சிறந்த பதிப்பகம்
- மீனா

நெய்வேலி புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 1 முதல் 10 தேதி வரை நடைபெறவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்துவருகிறது.
 
இவ்வாண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த பதிப்பகமாக  கிழக்கு பதிப்பகம் தேர்வாகி, கௌரவிக்கப்படவுள்ளது என்கிற தகவல் கிடைத்தது.
 
பதிப்புத்துறையில் கிழக்கு அடியெடுத்துவைத்து ஓராண்டு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இக்கௌரவம் கிடைப்பது பெரிய விஷயம் ஆகும்.

கிழக்கு பதிப்பகத்தின் நிறுவுனர்கள் திரு. பத்ரி மற்றும் திரு.சத்ய நாராயண் அவர்களுக்கும், அவரோடு பணியாற்றிய அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

- ஆர்
 

Copyright © 2005 Tamiloviam.com - Authors