தமிழோவியம்
டெலிவுட் : மந்த்ரா பேடியை ஞாபகமிருக்குதா ?
- சில்லுண்டி

மந்த்ரா பேடியை ஞாபகமிருக்குதா? அதாங்க.. நிறைய பேருக்கு கிரிக்கெட்னா இன்னாங்கிறதை கத்துக்கொடுத்த கில்மா பார்ட்டி. 'ஓன்' டி.வியில நடுராத்திரியில் வழக்கமா வர்ற கெட்அப்புல வந்து க்விஸ் புரொகிராம் நடத்துறாங்க. க்விஸ்னா சாதாரண க்விஸ் இல்லை..ரொம்ப கஷ்டமான கேள்விங்க. சாம்பிளுக்கு சிலது. ஷாருக்கான் நடிச்ச லேட்டஸ்ட் படம் இன்னா...பட்டோடியோட பொண்டாட்டி பேரு இன்னா.... கரெக்டா சொன்னா, மிக்ஸியிலேர்ந்து கிரைண்டர் வரைக்கும் என்னன்னவோ பிரைஸ் உண்டு. பட், ஜவாப் இந்தி மே போல்னா சாகியே!

எதிர்க்கட்சி ஆளுங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயரை வெச்சுட்டு (உதாரணம் முத்துக்காளை. யார் அந்த பிரபல அரசியல்வாதின்னு கேட்காதீங்க... கண்டுபுடிங்க!) கிண்டலடிச்சு கலாய்க்கிறாங்க ஜெயா டிவியில. ஞாயித்துக்கிழமை ராத்திரியில நசநசன்னு பேசிட்டிருக்கும் இந்த ரெண்டு பேரையும் பார்த்தாலே தூளா தூக்கம் வந்துடும். ஆளுங்கட்சிக்காரங்களாவது புரொகிராமை பார்த்து ரசிக்கிறாங்களான்னு லாயிட்ஸ் ரோடு பக்கம்தான் விசாரிக்கணும். பத்திரிக்கை, டி.வி, சினிமான்னு எல்லா இடத்துலேயும் அரசியல் விமர்சனங்கிறது இருக்கத்தான் செய்யுது. ஆனால், எல்லாமே கிண்டல் மயம். யாரும் அரசியலை சீரியஸா எடுத்துக்கிற மாதிரி தெரியலை. அரசியல் விவாதங்கிற பேர்ல சில நிகழ்ச்சிகள் இருக்கிறது உண்மைதான். ஆனா, எல்லாமே குழாயடி சண்டையையே கேவலப்படுத்துற மாதிரிதானே இருக்குது!

உங்கள் சாய்ஸை விஜய் டிவியில் உல்ட்டா பண்ணியிருந்தார்கள்.  அசல் அம்மா மாதிரி கொஞ்ச தெரியவில்லை. வழக்கம் போல குசலம் விசாரிக்கிறதிலேயே கொஞ்ச நேரத்தை கிட் நாப் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

'ஹை.... ஜிப்சி ஜில்மாவா.... ஹலோ மேடம், நல்லா இருக்கீங்களா..'

'ஹாய், நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?'

'நம்பவே முடியலை மேடம்... எட்டு வருஷமா டிரை பண்ணிக்கிட்டே இருந்தோம். இன்னிக்குத்தான் லைன் கிடைச்சது'

'அப்படியா... ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு புடிச்ச பாட்டு ஒன்ணு சொல்லுங்க.. போடறோம்'

'அவ்வை சண்முகியிலேர்ந்து ஒரு பாட்டு போடுங்க... '

'ரொம்ப பழைய பாட்டு ஆச்சே... லேட்டஸ்ட்டா ஏதாவது சொல்லுங்க..

'இல்லே மேடம்... அதான் சொன்னேனே. எட்டு வருஷமா லைன் டிரை பண்ணிட்டிருக்கோம்'

பதிலுக்கு ஜிப்ஸி ஜில்மா சிரிச்ச சிரிப்பு இருக்குதே.. ஹையோடா!

ரண்டக்க, ரண்டக்க... சன் மியூசிக்குல அடிக்கடி வர்றது இந்த ரண்டக்க ரண்டக்க! இஞ்சி இடுப்பழகி பத்தி ஆராய்ச்சி பண்ணின தமிழ் பத்திரிக்கையுலகம் அண்டங்காக்காய் கொண்டைக்காரி பத்தியும் யாரையாவது பொழிப்புரை எழுத வெச்சா நல்லா இருக்கும். கோரஸ் தனியா, பாடகரின் வாய்ஸ் தனியா பாட்டுல பளிச்சுன்னு தெரியுது. ஏதோ பின்பாட்டு பாடறமாதிரி ஒரு நேட்டிவிட்டி. இங்கே 'மறக்க மனம் கூடுதில்லையே'ன்னு சொல்ல வைக்கிறது சகட்டு மேனிக்கும் அடித்து தீட்டப்பட்டிருக்கும் பெயிண்ட்டிங்ஸ். பத்து செகண்ட் வரும் பாலத்திற்கெல்லாம் பெயிண்டாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள். 'ஹலோ, புரொட்யூஸரா? வூட்ல இருக்கீங்களா... தெருவுல இருக்கீங்களா?'

(போன வாரம் ஏன் ஆளையே காணோம்னு ஏகப்பட்ட விசாரிப்புகள். (ஹி...ஹி... வந்தது மூணு மெயில். அதுல ரெண்டு மெயில்ல 'டெலிவுட்'டை நிறுத்திட்டதா நினைச்சு கங்கிராட்ஸ் சொல்லியிருந்தாங்க!) சில்லுண்டிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. எப்பவும் பளிச்சுன்னு டிரெஸ் போட்டுக்கிட்டு பக்கம் பக்கமா டயலாக் பேச நாம என்ன சீரியல் ஆர்ட்டிஸ்டா ?)

Copyright © 2005 Tamiloviam.com - Authors