தமிழோவியம்
அறிவிப்பு : புதிய தொடர் : 'அல்வா'
-


Vijay - Halwacityஇக்காலக்கட்டத்தில் 'அல்வா' என்பதற்கு இனிப்பு பதார்த்தம் என்பதையும் தாண்டி பலவித அர்த்தங்களையும் கொடுக்கும். என் ஊர் திருநெல்வேலியிலிருந்து நான் முகாமிட்டுள்ள ஊருக்கு திரும்பி வந்தால் 'அல்வா'வோடு தான் வருவான் என்ற ஐதீகம் என் நண்பர்களிடையே உண்டு. உண்மையான இனிப்பு கொடுப்பதுடன் சில நேரம் 'அல்வா' கொடுப்பதும் உண்டு.அதே பழக்கத்தில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவாக நான் அறிந்த விசயங்களை சுவையுடன் எழுத முயற்சிப்பது வழக்கம். அதிகமாக சினிமாக்களைப் பார்க்கும் பழக்கம் உண்டு. எனக்கு தெரிந்த சினிமாக்களைப் பற்றி எழுதலாம் என்ற ஆவலும், இடையிடையே அறிந்தும் அறியாமலும் இருக்கும் விசயங்களையும் எழுதலாம் என்றும் நினைக்கிறேன்.

நிச்சயமாக உங்களுக்கு பிடித்தவகையில் என்னால் எழுத முடியுமென நினைக்கிறேன். நான் எழுதுவதில் கைத்தேர்ந்தவனோ இல்லையென்றால் எழுதுவது என்பது என் தொழிலோ இல்லை. படிப்பவர்களுக்கு படிக்கும் சில மணித்துளிகளுக்கு சந்தோசம் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆவல். அதுபோல் வாசகர்களாகிய உங்களின் எதிர்பார்ப்பு வழியாகவும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் உண்டு. தட்டிக் கொடுப்பதும் அப்போதைக்கப்போது குட்டு வைப்பதையும் உங்கள் கையில் விட்டு விடுகிறேன். ஆகவே உங்கள் கைகளையும் ப்ரீயாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த வாரத்திலிருந்து சந்திப்போம்....

அல்வாவுடன்
விஜய்

பின் குறிப்பு :

தமிழோவியத்தின் ஆரம்பக்காலத்திலிருந்தே நான் வாசகன். தமிழோவியம் 'அன்புள்ள டைரி'யில் ஒன்றிரண்டு எழுதியிருக்கிறேன். எதிலும் கமிட் ஆகிவிடக்கூடாது என்ற கெட்ட பழக்கத்தின் காரணமாக தமிழோவியத்தில் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆவலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். வருடம் முழுவதும் படிக்கும் பாடங்களைப் படிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாலும் முழுப்பரீட்சை எழுதி பாஸானால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இணைய தளங்களில் எழுத வேண்டுமென ஆசையிருந்தாலும் 'சுதந்திரம்' கருதி எப்போதும் விலகியே நின்றுருக்கிறேன். தீடிரென தமிழோவியத்தில் முழுப்பரீட்சை எழுதினால் என்ன என்ற ஆசை விளைந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors