தமிழோவியம்
கவிதை : கல்விப் பாடம்
- இராஜ.தியாகராஜன்

(வஞ்சி விருத்தம் - தேமா, கூவிளம், கூவிளம்)

தேர்வி லெத்தனை மாணவர்
ஓர்ந்த வெற்றியைத் தேடியே
ஆர்வ மேவிடக் கற்கிறார்;
சீர்மைக் கல்வியை நாளுமே!
 
ஈண்டு பெற்றிடும் தோல்வியுந்
தாண்டி நெஞ்சக வன்மையால்,
மீண்டும் வெற்றியைத் சேர்வதே;
நீண்ட கல்வியின் பாடமாய்ப்
 
பள்ளித் தேர்வினில் தோற்றவர்,
வெல்லு மூக்கமே சோர்ந்திடா
துள்ளம், மீளவுந் தேர்வதே
நல்ல மாணவர் தன்மையாம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors