தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : பிரிட்டிஷாருக்கு ஒரு பகிரங்க கடிதம்
- ஜெ. ரஜினி ராம்கி

காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே பொதுப்பிரச்சினைகள் வரும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட நபருக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதுவது வாடிக்கையாக இருந்துவந்தது. அத்தகைய பகிரங்க கடிதங்கள், எச்சரிக்கையாக அமையாமல் வேண்டுகோளாகத்தான் அமைந்திருக்கின்றன. தன் பக்கமிருக்கும் இருக்கும் நியாயத்தை மக்கள் அறியச் செய்ய இத்தகைய பகிரங்க கடிதங்கள் காந்திஜிக்கு உதவிகரமாக

அமைந்தன. நிறவெறி சம்பந்தமாகவும் தென்னாப்பிரிக்க தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலை குறித்தும் பிரிட்டிஷாருக்கு 1896ஆம் ஆண்டு பகிரங்க கடிதத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு பலன் இருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்த ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த நேரத்திலும் இந்தியாவிலிருக்கும் பிரிட்டிஷார்களுக்கு தனது பகிரங்க கடிதத்தின் மூலம் 1920ஆம் ஆண்டு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

'எனது இருபத்தொன்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நான் ஒத்துழைத்ததை விட அதிகமாக வேறு எந்த இந்தியரும் செய்ததில்லை. நான் எதிர்கொண்ட சூழ்நிலைகளில் வேறு யாராக இருந்தாலும் அவர் பெரும் கிளர்ச்சிக்காரராகவே மாறியிருப்பார். நான் அளித்த ஒத்துழைப்பு உங்கள் சட்டங்களில் உள்ள தண்டனைகளைப் பற்றிய பயத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த சுயநல நோக்கங்கள்

காரணமாகவோ அளிக்கப்பட்டதல்ல என்பதை முதலில் நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அவையெல்லாமே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இந்தியாவின் நன்மைக்காகவே உள்ளன என்கிற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவை...' என்று தொடரும் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் போயர் போரின் போது ஆம்புலன்ஸ் பிரிவுக்கு பொறுப்பேற்று பணி செய்தததையும் நேட்டாலில் ஒரு கலகத்தின் போது அதே மாதிரியான பொறுப்பிலிருந்து பிரட்டிஷார்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததையும் நினைவு கூர்கிறார்.

தன்னுடைய நாட்டுக்கு சாம்ராஜ்யத்தில் சமமான அந்தஸ்து கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போனதும் பிரிட்டிஷார்களின் மீதிருந்த எதிர்பார்ப்புகள் காந்திஜியிடம் காணாமல் போய்விட்டன. உங்களிடம் இனிமேலும் பேசிப் பயனில்லை என்பதை சுற்றி வளைத்து காந்திஜி எப்படி சொல்கிறார் தெரியுமா?

'உங்களுடைய நல்ல நோக்த்தில் எனக்கிருந்த நம்பிக்கை போய்விட்டாலும் உங்களுடைய வீரத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். நீதிக்கும்,  அறிவார்ந்த விவாதங்களுக்கும் நீங்கள் விட்டுக்கொடுக்காததை வீரத்திற்காக மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுப்பீர்கள் என்பதை நான் அறிவேன்'  பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவுக்கும் இந்தியா நாட்டுக்காகவும் என்னதான் செய்துகொண்டிருக்கிறது என்பதை பற்றி காந்திஜி ஒரு பட்டியல் போடுகிறார்.

இழுக்காவிட்டால் அணைந்துவிடும்

நியுயார்க்கில் இந்த வாரம் முதல் புது வகையான சிகரெட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விசேஷமே, சிறிது நேரம் புகை இழுக்கவில்லையென்றால் என்றால் அது தானே அணைந்து விடும். இது அமெரிக்காவில் முதன்முறையாக நியுயார்க்கில்தான் அறிமுகமாகிறது.
ஏற்கனவே நியுயார்க்கில் சிகரெட் விலை மிக அதிகம். இப்பொழுது இந்த புதிய வகையால் அது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இணையம் வழியாய் வேறு மாநிலங்களிலிருந்து மலிவான விலையில் சிகரெட் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அது தங்களை பாதிக்கும் என்று நியுயார்க் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் இந்தவகை சிகரெட்டை விற்காவிட்டால் அபராதமாய் ஆயிரம் டாலர்கள் கட்ட வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.

அணைக்காமல் போடப்படும் சிகரெட் துண்டுகளால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கவே இது போன்ற புதிய தயாரிப்பு. இது மிக விரைவில் எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்கிறது அரசுதரப்பு.

* இந்தியாவின் வளங்களை பிரிட்டனின் நன்மைக்காக சுரண்டிக் கொண்டு செல்லுதல்

* இந்தியாவில் நிலவும் வறுமையை அலட்சியம் செய்து ஊதாரித்தானமாக செயல்படுதல்

* தேசத்தின் வேதனையை வெளிப்படுத்தும் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக புதிதாக அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பது

* ராணுவம் போன்ற சிவில் சர்வீஸ்களின் செலவை அதிகரித்து வைத்திருப்பது

* தேசம் ஆயுதபாணியாக இருந்தால் கைப்பிடி அளவிலிருக்கும் தங்களுக்கு ஆபத்து என்று நினைத்து ஒரு பெரிய தேசத்தையே நிராயுதபாணியாக்கி

வைத்திருப்பது

* இந்தியாவின் கலாச்சாரத்துக்கு சம்பந்தமேயில்லாத மதுபானங்கள், போதைப் பொருட்களின் வர்த்தகத்தை கொண்டுவந்திருப்பது

* டொமினியன் பிராந்தியங்களில் வசிக்கும் இந்தியர்களை தரக்குறைவாக நடத்திவருவது

இவ்வளவு விஷயங்களையும் எங்களிடமிருந்து பறித்துவிட்டு பின்னர் போர்க்களத்தில் எங்களால் வீரம் காட்டமுடியாது என்பது உங்களுக்கு தெரியும்.
ஆனால், எங்கள் ஆத்மாவின் தீரத்தை எங்களால் வெளிக்காட்ட முடியும் என்கிறார் காந்திஜி.

பகிரங்க கடிதத்தின் மூலம் ஆயுதமேந்தாமல் ஒரு புரட்சிக்கு இந்திய மக்கள் தயாராகி வருவதாக காந்திஜி சொல்லியிருக்கிறார். இது ஆரம்பத்தில்
காந்திஜியின் அதீத தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று விமர்சிக்கப்பட்டாலும் இருபது வருஷங்களில் அதை உண்மையென்று காந்திஜியே
நிரூபித்துவிட்டார். பிரிட்டிஷார்களே தங்களது தவறை உணர்ந்து இந்தியாவின் உணர்வுக்கு இடம் கொடுத்து இடத்தை காலி செய்யவேண்டும்

என்பதுதான் காந்திஜியின் விருப்பமாக இருந்தது. அத்தகைய காலம் வரும் வரை தன்னுடைய அமைதிப் போரட்டத்தை தொடர்ந்து

கொண்டேயிருக்கப் போவதாகத்தான் அவர் முடிவெடுத்திருந்தார்.

'எங்கள் ஆத்மாவின் தீரத்தை தட்டியெழுப்புவதில் நான் ஈடுபட்டிருக்கிறேன். உங்களுக்கெதிராக கையை ஓங்கும் சக்தி எனக்கு கிடைத்தாலும் நான்

அதைச் செய்யமாட்டேன். ஒவ்வொரு இந்தியரையும் உண்மையிலேயே உங்களுக்கு சமமானவராகவும் உங்கள் சகோதரராகவும் நீங்க கருதவேண்டும்.

நான் சலுகை எதையும் கோரவில்லை. நண்பன் என்கிற முறையில் தீவிரமான ஒரு பிரச்சினைக்கு கெளரவமான தீர்வு ஒன்றைச் சுட்டிக் காட்ட

விரும்புகிறேன். இந்திய மக்களின் உணர்வுகளை உணர்ந்து எங்களுடன் இணைந்து கொள்ள உங்களை அழைக்கிறேன். இன்றும் இந்தியாவின்

உப்பைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். இந்த மக்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் தடுக்க முயல்வதும் ஒரு துரோகச் செயல்தான்'

நன்றி - இந்தியாவிலிருக்கும் ஆங்கிலேயர்களுக்கு காந்திஜி எழுதிய பகிரங்க கடிதம் - யங் இந்தியா 27.10.1920

Copyright © 2005 Tamiloviam.com - Authors