தமிழோவியம்
கலைஞருக்கு ஒரு கடிதம் : கலைஞருக்கு ஒரு கடிதம்
-

மதிப்பிற்குரிய கலைஞர் ஐயா அவர்களுக்கு,

எப்போதும் நீங்கள் தான் உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதுவீர்கள். ஒரு மாறுதலுக்காக உடன்பிறப்பாகிய நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்த தாங்கள், இந்தத் தேர்தலில் மூலம் தெற்கை வாழவைத்துவிட்டீர்கள். ஆனால் தாங்கள் வாழ்வைத்தது தெற்குப் பகுதி மக்களையா ? அல்லது தங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் சொந்தங்களையா ? என்ற கேள்வி மந்திரிப் பதவியைக் கேட்டுப் பெறுவதில் காட்டிய ஆர்வம் மற்றும் காவிரி விஷயத்தில் நீங்கள் நடந்துகொண்ட முறையைப் பார்ந்ததும் என் மனதில் எழுகிறது. இயற்கையின் கருணையினால் மட்டுமே காவிரியிலிருந்து தமிழகத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரிந்த நிஅலையில் - தங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணித் தலைவர்களும் ஏதோ தங்கள் முயற்சியால் மட்டுமே தண்ணீர் வந்ததைப் போல அறிக்கை விட்டதைத் தாங்கள் தடுக்கவும் இல்லை.. அவர்களைக் கண்டிக்கவும் இல்லை. ஆக, அவர்கள் இப்படிப் பேசுவதைத் தாங்கள் விரும்புகிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேலும் அறிவாலயத்திற்கு ஆபத்து என்றதும், " உயிரைக் கொடுத்தாவது அறிவாலயத்தைக் காப்பேன்!!" என்று சூளுரைக்கும் தாங்கள் - அத்தகைய எந்த முயற்சியையும் காவிரி விஷயத்தில் எடுக்கவில்லை என்பதை நினைக்கும்போது மனம் வெதும்புகிறது. முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்காததைக் குறித்து " தனக்கு எது நல்லது என்று படுகிறதோ அதை மட்டும் தான் அவர்கள் செய்வார்கள். மற்றபடி தமிழகம் எக்கேடு
கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன? " என்ற விமர்சன் செய்திருக்கும் தாங்கள், தமிழக நலனிற்காக மத்திய அரசில் பங்கேற்ற இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள்? யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீருக்காக மழையை எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக்கொண்டும், தண்ணீர் லாரி பின்னாலும் ஓடும் அவல நிலையில் தான் தமிழக மக்கள் எப்போதும் இருக்கிறார்கள்.

சரி! அடுத்ததாக தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாஸ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தைப் பேசினாலும் அவர்களை கண்டபடித் தாக்கிய வண்ணம் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். முத

இன்னொரு அஷ்டவதானி
இதுவரை நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்றிருந்த பார்த்திபன் தற்பொழுது தயாரிக்கும் புதிய படம் 'குடைக்குள் மழை'. இதில் இவர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது போதாதென்று இந்த படத்திற்கு ஒரு பாடல் வேறு எழுதியுள்ளார். படத்தை இரண்டு ஆண்டுகளாக பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

லில் ஒரு காரணமுமே இல்லாமல் ரஜினியைத் தாக்கினார். தற்போது விஜயகாந்த் அவருடைய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதைச் சகிக்கமுடியாமல் அவரைத் தாறுமாறாகத் திட்டுவதும், அவருடைய ரசிகர்களைத் தாக்குவதுமாக வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்களோ, இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தாங்களும் திரைப்படத் துறையிலிருந்து வந்தவர் தானே? " கலைஞர்கள் என்றால் கூத்தாடிகள்! " என்று அவர் பேசிவருவதை கலைஞரான நீங்கள் எப்படி கண்டிக்காமல் இருக்கிறீர்கள்? கடலூர் உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கட்சியினர் தோற்றதற்கு பா.ம.க வைக் கண்டபடி சாடும் தாங்கள் - அவர்கள் செய்யும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டாமா?

சிறுபான்மையின மக்களின் காவலனாக உங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள், சிறுபான்மையின மக்களுக்கு இதுவரைச் செய்தது என்ன? தேர்தலில் சீட் கொடுக்கும்போதுகூட அவர்களை நீங்கள் விலக்கியே வைத்தீர்கள். மந்திரிப்பதவி பற்றி மூச்!! ரம்ஜான் நேரத்தில் நோன்புக்கஞ்சி குடிக்க மட்டும் தான் நம் தலைவர்களுக்குத் தெரியும் - மற்றபடி சிறுபான்மையினருக்கு காவலனாக அவர்கள் காட்டிக்கொள்வது எல்லாம் வெறும் வேஷமே என்ற கூற்றை உண்மையாக்கியிருக்கிறீர்கள்..

தமிழக முதல்வராக பலமுறை பணியாற்றியவர் தாங்கள். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை தற்போதைய தமிழக நிலை. எனவே பொறுப்பான தலைவராக பணியாற்றுவீர்கள் என்று நம்பும் உடன்பிறப்பு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors