தமிழோவியம்
கவிதை : பெயர் கூறு!
- சிலம்பூர் யுகா, துபாய்

என்னுள்ளிருக்கிறாய்,
சில நேரம்
என்னையே
வெளியிலெடுக்கிறாய்!

சுகமாய்
சொர்ப்பதூரத்திலிருக்கிறாய்,
சில நேரம்
வேதனையாக்கி
வெகுதூரம்செல்கிறாய்!

சந்தோஷ அவஸ்தைகள்
அனைத்தையும்
சமர்பிக்கிறாய்,
சில நேரம்
சாவோடு
சமாதானம்செய்துவைக்கிறாய்!

நில்லாமல்
என்னைக்கொல்லும்
நீ யார்?

என் உயிரா,
என் கனவா,
இல்லை
என் காதலா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors