தமிழோவியம்
க. கண்டுக்கொண்டேன் : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
- ரமா சங்கரன்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்த அந்த மாணவருக்கு ஆங்கில இலக்கியத்தின் மேல் காதல். ஆனால் பொருளியல் படிப்பது தன் பிரகாசமான எதிர்காலத்திற்கு நல்லது என நினைத்தார். புவியியல் அவருக்கு குளிர்வீசும் தென்றல். இப்படித் தன் பட்டப்படிப்பில்  ஆங்கிலம், பொருளியல், பூகோளம் என்று மூன்று பாடங்களையும் எடுத்துப் படித்தார். மூன்றிலுமே முதலாண்டில் சிறப்பாகச் செய்தார். அப்போதெல்லாம்  முதலாண்டிலேயே சிறப்பாகத் தேறிய மாணவர்கள் ஹானர்ஸ் பட்ட வகுப்பிற்குப் போய் விடலாம்.  எந்த பாடத்தில் ஹானர்ஸ் பன்ணலாம் என அவர் யோசித்துக் கொண்டிருந்தார். அவரை புவியியல் பேராசிரியர் கூப்பிட்டனுப்பினார். அந்த பேராசிரியர் உயரமான ஸ்ரீலங்காவைச் சேர்ந்த மனிதர்.  நீண்ட காலமாக புவியியல் துறையில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டாதாரிகள் இல்லாமல் போனதால் அந்தப் புத்திசாலி  மாணவரைத் தன் துறையில் சேரலாமே! என்று யோசனைக் கூறினார். ஆனால் அந்த மாணவரோ  பொருளியல் பாடத்தில்  டாக்டர் பட்டம் பெறுவதே தன் நோக்கம் என எடுத்துரைத்தார்.  பேராசியர் ஆவதும் தன் நோக்கம் எனக் கூறினார். அதைக் கேட்ட பேராசிரியர் அந்த மாணவர் பேராசிரியர் ஆகும் விருப்பம் கொண்டதால் "எந்த துறையாக இருந்தால் என்ன? பொருளியலோ, புவியியலோ  அதனால் பரவாயில்லை." என்று அந்த மாணவரை ஊக்குவித்தார்.  பேராசிரியர் தன் எதிர்காலத்தின் மீதும், தான் பணிபுரிந்தத் துறையின் மீதும் காட்டிய அக்கறையை இப்போது 40 ஆண்டுகளுக்குப் பின் நினைவு கூர்ந்தார். அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த பேராசிரியரது இதுபோன்ற செயல் தன்னை வியப்பிலாழ்த்தியது என்றார் அவர்.

இப்படி நினைவு கூர்ந்தவர்  தேசியப் பல்கலைக் கழகத்தில் 1964ல் மாணவராகச் சேர்ந்த சிங்கப்பூரின் பிரதமர் கோ சோக் டோங். அவருடைய மாணவப் பருவத்தில் பல்கலைக்கழகத்தில் சேருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு ஆண்டிற்கு 1200 மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதாவது முப்பது பேரில் ஒருவர். "அப்படி ஒரு வாய்ப்பு கிட்டியபோது அவ்வேளையில்  நாங்கள் துள்ளினோம்; பெருமைப்பட்டோம்; பெரிய வெற்றியாகக் கருதினோம்" என்றார் பிரதமர்.  ஆனால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் மாணவர்கள் 9,200 பேர்  இங்குள்ள சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப்ப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகச் சங்கம்  அண்மையில் தனது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இச்சங்கம் நகர்மத்தியில் சன் டெக் சிட்டியில் கில்ட் ஹவுஸை திறந்தது. பல்கலைக்கழகத்தின் பழைய மாணாக்கர்களில் ஒருவரான பிரதமர் கோ  இச்சங்கத்தின் பெருமைக்குரிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். இவரே அதைத் திறந்தும் வைத்தார்.

தனக்கு பாடம் சொல்லித் தந்த பேராசிரியர்கள் காட்டிய அக்கறை மட்டுமில்லை; அவர்கள் காட்டிய அந்த மனிதாபிமானமும் போற்றுதற்குரியது" என்றார் அவர். அப்போது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் லிம் தே போ என்பவரின் கருணை மனதையும் அவர் பாராட்டினார். பிரதமர் கோ தன் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக ஆய்வு மேற்கொள்ள  பல்கலைக்கழகத்தின் உபகார சம்பளத்திற்கு விண்ணப்பித்தார்.  மாதம் 700 சிங்கப்பூர் டாலர் பெறுமானமுள்ள உபகார சம்பளம் அவருக்குக் கிட்டியது. இரண்டு வாரங்கள் பிரதமர் கோ ஆய்வுப்ப்பணியை மேற்கொண்டார். அப்போது அவரைக் கூப்பிடடனுப்பினார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர். ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கச் சேவையுடன் பிரதமர் கோவிற்கு  இருந்தது. துணை வேந்தர் எவ்வளவு முயன்றும் பிரதமர் கோவை அரசாங்கச் சேவையின் ஒப்பந்ததிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்றும் அவர் பிரதமரை பல்கலைக்கழகத்திலேயே மாணாக்கராக வைத்திருக்க விரும்பினாலும் இயலாமல் போய்விட்டது என்றும் வருந்தினார். பிரதமர் கோ ஆய்வுத் துறையில் முதல் இரண்டு வாரங்களில் எதையும் பெரிதாக செய்யவில்லை.  என்றாலும் அவருக்குத் துணை வேந்தர் இருவார சம்பளத்தையும் கொடுத்தார்.

தான் புவியியல் படித்திருந்தாலோ அல்லது துணைவேந்தர் பேராசிரியர் லிம் தே போ அரசாங்கச்

மது அருந்துவது மாதுக்களுக்கு நல்லது

வாரத்திற்கு எட்டு கிளாஸ் மது அருந்தினால் அது பெண்களின் முதுகெலும்புகளுக்கு நல்லது என்று st. தாமஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மது அருந்துவதற்கும் முதுகெலும்புக்கும் என்ன சம்பந்தம் என்று சரியாக விளக்காவிட்டாலும் அளவாய் அருந்துவதால் அது மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பிபிசி செய்தியை படிக்கவும். http://news.bbc.co.uk/2/hi/health/3855813.stm
சேவையிலிருந்து தன்னை விடுவித்திருந்தாலோ வாழ்நாள் முழுதும் சிங்கப்பூருக்குத்தான் கடமையாற்றுவது நேராமல் போயிருக்கலாம் என்றார் பிரதமர் கோ.  சிறிய வழிகளில் ஆசிரியர்கள் காட்டும் அன்பும், மனிதாபிமானமும் நாம் படித்து வெளியான பின்னும் நம் கல்விநிலையங்களைப் பற்றி நினைக்கவும் ஏங்கவும்  வைக்கும்;  பிணைப்பை அதிகரிக்கும்.  நாம் படித்த பள்ளிகூடங்களுக்கோ  அல்லது கல்லூரிகளுக்கோ போக நேரிட்டால் நமக்கு ஏற்படும் பாசமும் உணர்வும் வித்தியாசமானது. மாணவர்கள் ஒரு நாட்டின் பிரதமராக ஆனாலும் சரி; இல்லை, அதிபரானாலும் சரி - மாணாக்கர் பருவம் என்றும் பசுமரத்தாணி போல நினைவிலேயே இருக்கும். பல தலைவர்களின் வரலாற்று நூலில் நாம் இதைப் பார்க்கிறோம்.

சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் 70 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பக்காலத்தில்  ராபிள்ஸ் கல்லூரி என அழைக்கப்பட்டது. பிரதமர் பல்கலைக்கழக மாணாக்கராவதற்கு முன்பு  மலேசியாவும்  சிங்கப்பூரும் இணைந்த காலங்களில் அது மலாயா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது.  பின்னர் பிரதமர் கோவின் காலங்களில் அது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமாக புக்கிட் தீமாவில் இருந்தது. பின்னர் அது தற்போதைய கென்ட்ரிஜ் வளாகத்திற்கு இடம் மாறியது.  புதிய வளாகத்திற்குச் செல்லும்போது தனக்கு புக்கிட் தீமா  வளாகம் போல அதை ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கிறது. அந்த பழைய வளாகத்தின்  மீதான  அதே பாசம் கென்ட்ரிஜ் மீது வருவதில்லை என்று அதையும் பிரதமர் தன் உரையில் கூறினார். சிங்கப்பூர் பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் கண்டதாலும், இடம் பெயர்ந்ததாலும் மாணவர்களின் மனதில் அது தனி இடம் பிடிப்பது சாத்தியப்படாமல் போயிருக்கலாம். ஆனால் இன்று  உலகமயமாதல் கொள்கையின் அடிப்படையில் இந்தியா, சீனா, மற்றும் அண்டைநாடுகளில் சிங்கப்பூர் தன் கல்விக் கொள்கைகளை பல்கலைக்கழகங்கள், கல்விநிலையங்களின் தொடர்பு மையங்களை நிறுவி பரப்பவும்  பிறநாட்டு மாணவர்களைக் கவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களானாலும் சரி, திண்ணைப்பள்ளிக்கூடம் ஆனாலும் சரி - பேராசியர்கள் மட்டுமில்லை. நண்பர்கள் காட்டும் நட்புணர்வும், பேராசிரியர்களின் உரைகளின்போது கிட்டும் அறிவாக்கதிறனும், படிக்கும்போது நடக்கும் பல நிகழ்ச்சிகளும் கூட நமக்கு நம் கல்வி நிலையங்களோடு ஏற்படும் நெருக்கத்தையும் பிணைப்பையும் தீர்மானிக்கிறது. 

Copyright © 2005 Tamiloviam.com - Authors