தமிழோவியம்
கவிதை : கண்களால் ....
- சத்தி சக்திதாசன்


கண்களால் கதை சொல்லு
கவிதையாய்ப் பார்த்துவிடு
காதலாய்ப் பொழிந்துவிடு

காலத்தை நிறுத்திவிடு
கைகளால் தழுவிவிடு
கம்பனைத் தவிக்கவிடு

காற்றோடு கலந்துவிடு
கனவுகளில் மிதந்துவிடு
கண்ணிமையாய் மாறிவிடு

கற்கண்டாய் இனித்துவிடு
காதோரம் இசைத்துவிடு
கல்லாகச் சமைந்துவிடு

கடலோடு கரைந்துவிடு
கனியாகக் கனிந்துவிடு
கிளிபோல பேசிவிடு

கையோடு இணைந்துவிடு
காதலியே இசைந்துவிடு
கண்ணீரைக் களைந்துவிடு

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors