தமிழோவியம்
நூல் அறிமுகம் : ஜனகணமன
- கணேஷ் சந்திரா

ஆசிரியர் : மாலன்

JanaGanaManaஒரு சரித்திர கால நிகழ்வை (காந்திஜி - கோட்சே)  நாவல் பாணியில் விறுவிறுப்பாக படைத்திருக்கிறார் ஆசிரியர் மாலன்.

சுதந்திரத்துக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி தர வேண்டி காந்திஜி உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற நிகழ்வோடு நாவல் தொடங்குகிறது. கோட்சே மற்றும் அவன் சகாக்களுக்கு காந்திஜியின் உண்ணாவிரதம் ஒரு 'ப்ளாக்மெயில் அரசியல்' உக்தியாக படுகிறது. இனியும் இதை தொடர்ந்து அனுமதிக்க கூடாது என்று அவரை சாய்க்க திட்டமிடுகிறார்கள்.

கோட்சேயின் முதல் தோல்வியும், இந்திய போலீசாரின் மெத்தனமும், காந்திஜியின் பிடிவாதமும் பின்னர் ஜன். 30ம் தேதி நடந்தது என்று சம்பவங்களை அழகாக வரிசைப்படுத்தியுள்ளார்.

ஆர்.எஸ் மனோகரின் 'இலங்கேஸ்வரன்', 'நரகாசுரன்' நாடகங்கள் போல் நாதுராம் கோட்சேயின் பேச்சு சாதுர்யம், புத்திசாலித்தனம், காந்திஜியை கொல்வதற்கான நியாயங்கள் என்று கோட்சே பக்கம் நம்மை இழுத்துச்செல்கிறார்.

ஆசிரியர் தன்னுடைய முன்னுரையில்

Nathuram Godse"காந்திக்கும், கோட்சேக்கும் மனத்தளவில் ஏராளமான ஒற்றுமைகள் இருந்தன. தங்கள் மனதுக்குச் சரி என்று பட்டவைகளை எத்தனை எதிர்ப்புக்கும், இகழ்ச்சிக்கும், உயிருக்கும் கூட அஞ்சாமல் பகிரங்கமாகச் சொல்கிற நேர்மை இருவரிடத்தும் இருந்தது. காந்தி பிரம்மச்சரியத்தை வற்புறுத்தினார். கோட்சேயும் மிக எளிய ஆடைகளையே அணிந்தார். காந்தி தனக்கென்று

எதுவும் சொத்து வைத்துக்கொள்ளவில்லை. கோட்சே தனக்கு உரிமையான சொத்துக்களையும் உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் விட்டுக்கொடுத்தார். இருவரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேச பக்தர்கள்." என்று கூறுகிறார்.

இந்த நாவலை ரமணன் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் உதவியுடன் போலீசாரின் மெத்தனத்தை விளக்கியுள்ளார்.

விலை : ரூ.40

160 பக்கங்கள்

கிடைக்குமிடம்

http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=26&products_id=26004

http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&itemid=5

 

 

 


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors