தமிழோவியம்
கவிதை : எனக்குள்ளே நீ
- சத்தி சக்திதாசன்

                                
எங்கே செல்கின்றாய் ?
எனக்குள்ளே நீ !
என்னுள்ளே வாழ்ந்து கொண்டே
எண்ணத்தினில் ஏன் இன்னும் தேடல் ?

உள்ளம் உதிர்க்கும் அந்த வினாடி
உணர்ச்சியினுள் ஒளிந்திருக்கும்
ஊன உறவு ஏனோ
உரசிக்கொண்டே என்றும்
ஊஞ்சலாடுகிறது

கள்ளத்தில் பிறந்தது நம் உறவு என்றால்
கண்மணியே என்னுலகில்
களவு கூட நியாயமானதே !
கண்களால் வரைந்தது தான்
காதல் என்றால் ஏன் அனைத்து
கண்களும் பரிசு பெறவில்லை ?

எனக்குள்ளே நீ
ஏறிக்கொண்ட நாள் எதுவென
உன்னைத் தாங்கும்
என்னை என்றுமே
எனக்குப் பிடித்¢ருக்கிறது


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors