தமிழோவியம்
பெண்ணோவியம் : சமையல்
- மீனா

பனீர் பஜ்ஜி

தேவையானவை

பனீர் ஸ்லைஸ் 20
புதினா சட்னி கால் கப்
மைதா, சோளமாவு தலா அரை கப்
மிளகாய் பொடி 1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் பொறிக்க

செய்முறை

பனீர் ஸ்லைஸை எடுத்து,  ஒவ்வொரு பீஸிலும் ஒரு பக்கத்தில் புதினா சட்னியைத் தடவி மற்றொரு பனீர் பீஸால் மூடுங்கள்.  மைதாமாவு மற்றும் சோளமாவை நன்கு சலித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு மாவுகளையும், கலர் பொடி, மிளகாய் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். பனீர் சாண்ட்விச் ஒவ்வொன்றையும் இந்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

தக்காளி சாஸ¤டன் சுடச்சுடச் சாப்பிட, இன்னும் 4 பஜ்ஜி உள்ளே போகும்.அவல் கட்லெட்

தேவையானவை

கெட்டி அவல் 1 கப்
உருளைக் கிழங்கு 2
மைதா 3 டேபிள் ஸ்பூன்
புதினா 1 கைப்பிடி அளவு
மல்லித்தழை 1 கைப்பிடி அளவு
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 3
ப்ரெட் தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் பொறிக்க

செய்முறை

அவலைச் சுத்தம் செய்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு உதிர்த்து வையுங்கள். புதினா, மல்லி, மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்குங்கள். ஊறிய அவலை பிழிந்தெடுத்து அதனுடன் கிழங்கு, நறுக்கிய பொருட்கள், உப்பு சேர்த்துப் பிசையுங்கள். மைதாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து வையுங்கள். அவல் கலவையை சிறிது சிறிதாக எடுத்து, விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் முக்குங்கள். பிறகு ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான அவல் கட்லெட் ரெடி. பொறிக்க வேண்டாம் என்றல் தோசைக்கல்லில் போட்டி இரண்டு பக்கமும் நன்றாகச் சிவந்ததும் எடுக்கவும். சூப்பரான மாலை நேர சிற்றுண்டி ரெடி!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors