தமிழோவியம்
துணுக்கு : கொறிக்க சில துணுக்குஸ்
-

தங்கத் தமிழ் மக்களுக்கு, வெள்ளியை விரும்பும் உலகம் உலகநாதன் எழுதுவது. இந்தப் பகுதியைப் பற்றிய குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை அடுத்தவர்களிடம் சொல்லுங்கள். 

* பேரனா ? பேத்தியா ? என்று நடிகர் ரஜினிகாந்த் டென்ஷனாக இருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன. சுப்பர் ஸ்டாருக்கு பேத்தி தான் பிறக்கப் போகிறாளாம். இதனை அடித்துச் சொன்னார் அப்போலோ டாக்டர் ஒருவர். மகளை கார் ஓட்டச் சொல்லி விபத்திச் சிக்கிய எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனை சென்னைக்கு கொண்டு செல்ல தூத்துக்குடி வந்த அப்போலோ டாக்டர் ஒருவர் முக்கியமான புலனாய்வு நிருபரின் அக்கா மாப்பிள்ளையாம். அவர் தான் தனது மச்சினனிடம் சொல்லி இருக்கிறார். புலனாய்வு நிருபர் தனது பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்திருக்கிறார், பத்திரிக்கையோ கண்டு கொள்ளவில்லையாம்.

* பெரியார் வேஷம் போட்டு நடிகர் சத்தியராஜ் பெரியார் படத்தில் நடிக்கிறார். பெரியாரை பற்றி நன்கு தெரிந்துsathyaraj கொள்வோம் என்று பெரியார் பற்றிய புத்தகங்களை படிக்கும் பொழுது இவருக்கு ஒரு விஷயம் தெரிந்ததாம். அதாவது பெரியார் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் குளிப்பாராம். அதுவும் காக்கா குளியல் தானாம். இதனை படித்துப் பார்த்த சத்தியராஜ் மூக்கைப் பிடித்துக் கொண்டாராம்.

* தமில் வளர்க்கும் தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு இணையதளங்களே இல்லை என்று ஓவர்பில்டப் கொடுத்து கருத்து என்ற இணையதளத்தை ஆரம்பித்த கவிதாயினி கனிமொழியும்,  கார்த்திக்கும் இணைந்து கோவையில் ஒரு கருத்தரங்கு வைத்தார்கள். அதில் முக்கியமான விவாதம் இட ஒதுக்கீடு யாருக்கு வழங்கலாம் என்பது தான். இதில் பேசிய கார்த்திக் சிதம்பரம் இடஒதுக்கீடு ஜாதி ரீதியாக கொடுக்கக் கூடாது, பொருளாதார அடிப்படையில் தான் தர வேண்டும் என்று பேசி இருக்கிறார். கருத்து சொல்ல மைக் பிடித்த ஒரு அருந்ததி இனத்தை சேர்ந்த பெண், எங்கள் இனம் தான் தமிழகத்தில் மலம் அள்ளும் பணியை செய்கிறது. நீங்கள் ஜாதி ரீதியாக இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய உங்கள் ஜாதியை சேர்ந்தவர்களை மலம் அள்ள வைப்பீர்களா?அதற்கு உங்கள் ஜாதி சம்மதிக்குமா? என்று கேள்வி கணைகளை வீசி இருக்கிறார். கனிமொழியும், கார்த்திக்கும் மவுனமாக இருந்தார்களாம். இதற்கான பதிலை கருத்து இணையதளத்தில் தான் எழதுவார்களோ, என்னவோ யார் கண்டது.


jaya mk* இரண்டு ஏக்கர் நிலம் எப்படி வழங்குவீர்கள் என்று எதிர்கட்சித் தலைவரான ஜெயலலிதா தொடர்ந்து பேசி வந்தார். இப்பொழுது இதனை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல போராட்டம் வேறு அறிவித்து விட்டார். இதனை கண்டு ஆளும் கட்சியினர் என்ன செய்வது என்று கையை பிசைகிறார்களாம். காரணம் தமிழ் நாட்டில் அனைவருக்கும் இலவச நிலம் தர முடியாதாம். அதிலும் கொடைக்கானல் போன்ற ஊர்களில் தரிசு நிலமே இல்லையாம்.

* அண்ணியை பத்தி மட்டமா படம் எடுத்த உயிர் பட இயக்குனரை ஓட விட்டு அடிக்கணும் என்று ஹீரோ வடிவேலு ஒரு கூட்டத்தில் பேசியது தான் தாமதம். உயிர் பட இயக்குனர் பிடித்துக் கொண்டார். நீ எத்தனை படத்தில அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டிட்டு ஓடியிருக்கிறாய், எத்தனை படத்தில் அண்ணிகளை கவர் பண்ணுவது மாதிரி நடித்திருக்கிறாய் என்று காய்ச்சி எடுத்து விட்டார். இதனை பார்த்த இயக்குனர் இமயம் இருவரையும் அழைத்து சமாதானப் படுத்தி, ஒன்றாக உட்கார வைத்து பீர் குடிக்க வைத்தாராம்.. இப்பொழுது இருவருமே கப்சிப்.

ganguly* அரசியல்வாதிகளை பிடித்தால் எதையும் சாதிக்கலாம் என்ற இந்திய மண்ணின் தத்துவம் மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது. இந்திய உத்தேச அணியில் இடம் பிடித்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி. அவர் அணியில் இடம் பெற்றதற்கு காரணமே அரசியல் தான் என்கிறார்கள் விமர்சகர்கள். மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக வெற்றி பெற்ற டால்மியாவுக்கு அம்மாநில முதல்வர் புத்த பட்டாச்சார்யா எதிர்ப்பு கிளப்பி பேசி வருகிறார். இதற்கு கங்குலி பலத்த ஆதரவு தெரிவித்தார். இப்படி டால்மியா எதிர்ப்பாளர்காளான புத்த பட்டாச்சார்யா, சரத்பவார் உடன் கங்குலி புது கூட்டணி வைத்த உடன் அணியில் இடம் பிடித்து விட்டார். இனி கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வந்தாலும் வந்து விடுவார்.

* பத்திரிக்கைகளைப் புரட்டினாலே கணவனை கொலை செய்த மனைவிகள் தான் அதிகமாக இடம் பிடித்தார்கள். இந்த இடத்தை இப்பொழுது போலி பிஷப் ஆனந்தராஜ் பிடித்துக் கொண்டார். இதிலும் ஒரு பெண்ணை தொடர்பு படுத்தி, போலி பிஷப்புக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு என்று போலீஸ் தரும் செய்திகளை அதி முக்கியமாக போடுகின்றன பத்திரிக்கைகள். இதற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம். நாட்டில் அரசியல் நிலவரம் மாநிலத்திலும் சரியில்லை, மத்தியிலம் சரியில்லை. அதனால்  இது போன்ற செய்திகளை பெண்களோடு தொடர்பு படுத்தி வெளியிடும் படி மைனாரிட்டி ஆட்சி நடத்துபவர்கள் காவல் துறைக்கு உத்தரவு போட்டு இருக்கிறதாம். எல்லா கேசுக்கும் பெண்களுக்கு எங்கே போறது என்று ஒரு காவல் துறையினர் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
* தமிழக முதல்வருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதாம். விரைவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் முதல்வராக பதவி உயர்வு பெறுவார் என்று உடன் பிறப்புக்கள், உளுந்தன் பருப்பை சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார்கள்.

* பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்த நட்வர்சிங் மீது செம கடுப்பில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. கட்சியை விட்டு தன்னை நீக்கினால் தான் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து உங்கள் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏத்துவேன் என்று நட்வர்சிங் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுகிறாராம். பிரச்சினையை ஆறப் போட காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறதாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors