தமிழோவியம்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : விக்கிரங்கள் இருப்பதேன் ?
-

இந்துமத வழிபாட்டில் வெவ்வேறு விதமான தோற்றமும், முக அமைப்பும், செயல் வடிவமும் கொண்ட விக்கிரங்கள் இருப்பதேன் ? கடவுளை இப்படிப் பல்வேறு உணர்ச்சி வடிவங்களாக நம் நினைத்து வழிபடுவதன் பொருள் என்ன ?

நாம் ஓர் அழகான ஆணையோ, பெண்ணையோ பார்க்கும்போது மனதில் மென்மையான உணர்வுகள் தோன்றுகின்றன. உடல்பலம் மிகுந்த் ஒரு பயில்வானைப் பார்க்கும் போது மனதில் வீர உணர்ச்சி எழுகிறது. ஓர் உணர்ச்சி மிகுந்த தாயையும் - குழந்தையையும் பார்க்கும் போது மனத்தில் உணர்ச்சிகள் கனிந்து எழுகின்றன. வெவ்வேறு விதமான விக்கிரக வடிவங்கள் யாவும் இப்படிப்பட்ட மென்மையான உயர்ந்த உணர்ச்சிகளை நம் உள்ளத்தில் தோற்றுவிப்பதற்காக எழுந்தவையே.

பைரவர், அனுமான், காளி போன்ற உக்கிரமான தோற்றம் கொண்ட உருவங்கள் நம் மனதில் வீர உணர்வைத் தோற்றுவிக்கின்றன. சரஸ்வதி, லட்சுமி போன்றவர்கள் கலை உணர்வையும், இராமர், கிருஷ்ணர் போன்ற உருவங்கள் மனத்தில் மென்மையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. காமாட்சி, பராசக்தி போன்ற வடிவங்கள் தாய்மை உணர்வுக்கு மேன்மை தருகின்றன.

இப்படி வாழ்க்கையில் நாம் உணரும் உணர்ச்சிகளை ஒட்டியே இந்த விக்கிரகங்களின் வடிவங்களும் அமைந்தன. வாழ்வு இயலை ஒட்டி அமைந்ததே இந்துமதம்.

- ஸ்ரீ சுவாமி மகாராஜ் (சிந்தாந்த இரகசியம் நூலிலிருந்து)

Copyright © 2005 Tamiloviam.com - Authors