தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : உள்ளங்கையில் உறங்கும் நாள்
- பொன்ஸ்


தோள் மேலமர்ந்து
சாமி பார்த்த நாட்கள்..

என் தலை நோகாது
உன் கை நோகக்
குளிக்க வைத்த நாட்கள்..

ஒற்றைக் கையால்
குளத்தில் எறிந்து
நீந்த வைத்த நாட்கள்..

மகளென
மலர்ந்ததில்
இழந்தது
எத்தனை?!

மீண்டும்
மழலை திரும்ப
வேண்டும்,
உன் போர்வையில் புகுந்து
உள்ளங்கைகளில்
உறங்கும்
ஒரு நாளுக்காகவேனும்

Copyright © 2005 Tamiloviam.com - Authors