தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 1
-

இந்த புதிய பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

இதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 10 வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

TO Girlஅனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டா..

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.



இதோ கேள்விகள்

1. முச்சங்கங்கள் பற்றிய முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது? ஆசிரியர் யார்?

2. இடைச்சங்கம் அமைந்த இடம் எது?

3. முச்சங்கங்களிலும் அரங்கேறியதாகக் கூறப்படும் நூல் எது?

4. தொல்காப்பியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?

5. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது?

6. உடலில் நிகழும் மெய்ப்பாடுகள் எத்தனை? அவை எவை?

7. முதல், இடை, கடைச் சங்கங்களை ஆதரித்த அரசர்கள் எத்துணைப் பேர்?


விடைகள் , அறிவுஜீவிக்களோடு ..  அடுத்த வாரம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors