தமிழோவியம்
அடடே !! : சிந்திக்க - சிரிக்க - வாசிக்க
-

சிந்திக்க :

 • நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம்  உள்ளத்தை திறக்கிறோம்.
 • இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
 • யார் யார் எதில் உயாந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
 • மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
 • துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
 • வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.

சிரிப்பின் வகைகள் :

 • ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
 • மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
 • ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
 • இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
 • கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
 • மகிமையில் சிரிப்பவன் மன்னன்
 • தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
 • தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
 • இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
 • கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்
 • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

வாசிக்க :

வாய்பாடுகள் என்றால் சிலருக்கு அலர்ஜி தான். ஆனால் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்ற சில வாய்பாடுகள் இருக்காத்தான் செய்கின்றன. அதற்கு உதாரணம் இதோ:

37x3 = 111
37x6 = 222
37x9 = 333
37x12 =444
37x15 =555
37x18 =666
37x21 =777
37x24 =888
37x27 =999

 

ஒரு சில பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். நடமாடும் விலங்குகளின் பெயரில் அமைந்துள்ள சில ஊர்ப் பெயர்கள் இதோ:

  • காளையார்கோவில்
  • புலியூர்
  • எருமைப்பட்டி
  • ஆடுதுறை
  • குதிரைவெட்டி
  • நரிக்குடி
  • மந்தி தோப்பு
  • மீன் சுருட்டி
  • குருவிகுளம்
  • யாணைக்கல்
  • கரடிகுளம்
  • கழுகுமலை
  • கிளியனூர்.
Copyright © 2005 Tamiloviam.com - Authors