தமிழோவியம்
திரையோவியம் : நகைச்சுவை நடிகர் கருணாஸின் உலகப் பயணம்
- என்.டி. ராஜன்

குறுக்கெழுத்து

ஏ.பி.எஸ் கார்பொரேஷன் நிறுவனம் தயாரிக்கும் குறுக்கெழுத்து படம் 6 இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம். கதையில் நகரத்தை விட்டு, அடர்ந்த காட்டில் வந்து வாழத் தொடங்குகிறார்கள் 6 இளைஞர்கள். நகரத்து பரபரப்பை வெறுக்கும் அவர்கள், காட்டில் தங்கியிருக்கும்போது ஒரு மர்மத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஒருவர் பின் ஒருவராக 6 பேரும் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் என்ன மர்மத்தைக் கண்டுபிடித்தார்கள்? யார் இவர்களைக் கொன்றது என்பதே இந்த திகில் படத்தின் மூலக் கதை. எஸ்.ஏ பாஸ்கர் இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். வசந்த், லஷ்மி ராய், சரண்ராஜ், சேது விநாயகம் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

செப்டம்பரில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


 
Karunasநகைச்சுவை நடிகர் கருணாஸின் உலகப் பயணம்

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கரூரில் உள்ள அனாதைக் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்ட வேண்டி, ஒரு உலகச் சுற்றுப் பயணத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். காதல் எப்.எம் படப்பிடிப்பில் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, " அனாதைக் குழந்தைகள் படிப்பதற்காக 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பள்ளிக்கூடம் கட்டத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு வேண்டிய நிதியைத் திரட்ட வெளிநாடுகளில் வாழும் என்னுடைய நண்பர்கள் உதவியுடன் அங்கே கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளேன். " என்று கூறினார். இதற்காக ஆகும் செலவை யார் ஏற்கப்போகிறார்கள்? என்று கேட்டதற்கு, " என்ன கேள்வி இது? நான் தான் மொத்த செலவையும் செய்யப்போகிறேன். இதன் மூலம் வரும் வருமானம் அனாதைக் குழந்தைகளுக்கு.. " என்று கூறி அசத்தினார்.


இனி பேட்டி கிடையாதுNamitha

கவர்சிகரமான போஸ் கொடுப்பதிலும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்த நமிதா, இனி நிருபர்களுடன் பேசப்போவதில்லை என்று தீர்மானம் செய்திருக்கிறார். சில பத்திரிக்கைகள் நமிதா தன்  நண்பர் பரத் கபூரைத் திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்று செய்தி வெளியிட்டதிலிருந்துதான் இந்தத் தீர்மானமாம். " சில நிரூபர்கள் தங்களுடைய சொந்த லாபத்திற்காக தங்கள் இஷ்டத்திற்கு செய்தி வெளியிடுகிறார்கள். இவர்களுடைய பேட்டியில் என்னை மிகவும் தவறாக காட்டியுள்ளார்கள். இனி நான் யாருக்கும் பேட்டி கொடுக்கப்போவதில்லை." என்று கூறியுள்ளார் நமிதா.

Copyright © 2005 Tamiloviam.com - Authors