தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 3
-

இந்த புதிய பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 10 வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டா.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


இதோ இந்த வார கேள்விகள்

1. 'பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியே வா' என்று குரல் கொடுத்தவர் யார்?

2. 'பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்' என்று பாடியவர் யார்?

3. 'கணக்கு பிணக்கு, எனக்கு ஆமணக்கு' என்று எழுதியவர் யார்?

4. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கும்  நூல் எது? 

5. 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்' என்று பாடியவர் யார்?

6. யாருக்கு இரங்கல்கவிதை பாடும்போது, 'சாவே, உனக்கொரு சாவு வந்து நேராதோ' என்று கண்ணதாசன் வருந்தினார்?

7. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' என எழுதியவர் யார்?

8. 'தமிழச்சியைப்போல் இன்னொரு பெண் அழகாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை' என்று சொன்ன கவிஞர் யார்?

9. எவரிடம் 'அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் எந்தையோடு இருந்தோம்' என்று யார் பாடினார்கள்?

10. 'இருப்பது ஒரு உயிர், அது போவதும் ஒருமுறை, அது தமிழுக்காக போகட்டும்' என்றவர் யார்?


சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. 'பிஷூ' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?  (விடை :  ந. பிச்சமூர்த்தி)

2. 'மயன்' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?  (விடை : க.நா. சுப்ரமண்யம்)

3. 'நாணல்' என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்? (விடை : பேராசிரியர் அ. சீனிவாசராகவன்)

4. 'சாலிவாஹனன்' என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்? (விடை : வி. ரா. ராஜகோபாலன்)

5. 'விக்ரஹவிநாசன்' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்? (விடை : எம்.வி. வெங்கட்ராம்)

6. 'பசுவய்யா' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்? (விடை : சுந்தர ராமசாமி)

7. 'செல்வம்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியவர் யார்? (விடை : சி. மணி)

8. 'வே. மாலி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்? (விடை : சி. மணி (இதுவும் அவரே!))

9. டி.சி. ராமலிங்கம் எந்தப் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர்? (விடை : தரும சிவராமு)

10. டி.கே. துரைஸ்வாமி எந்தப் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர்? (விடை : நகுலன்)

 

அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி :  "கூகிள்" மன்னிக்கவும் எழில் (emayil@gmail.com)

வாழ்த்துக்கள் எழில் :) !!

Copyright © 2005 Tamiloviam.com - Authors