தமிழோவியம்
சிறுவர் பகுதி : கியோட்டோ கவர்னர் - ஜென் கதை
-

கியோட்டோவின் கவர்னர் முதல் முறையாக ஒரு ஜென்குருவைக் காணவந்தார்.

கவர்னரின் மெய்க்காப்பாளன் ஜென்குருவிடம் கவர்னரின் பெயர் பொறித்த சீட்டைக் கொடுத்தான்.

"கிடாகாகி, கியோட்டோ கவர்னர்" என்று அதில் எழுதி இருந்தது.

"இந்த ஆளிடம் எனக்கு எதுவும் பேசத் தேவையில்லை.. உடனே இங்கிருந்து அவனைப் போகச்சொல்லு.." என்று குரு தன் சீடனிடம் கூறினார்.

மெய்க்காப்பாளன் நடந்ததை அப்படியே கவர்னரிடம் சொல்ல, "அது என் தப்புதான்.." என்று கூறியபடியே அடையாள அட்டையை வாங்கி "கியோடோவின் கவர்னர்" என்ற சொற்களை அடித்துவிட்டு "இதை மறுபடியும் குருவிடம் காட்டு.." என்றார்.

"ஓ! கிடாகாகியா? " என்றார் அட்டையைப் பார்த்து குரு முகமலர்ச்சியுடன். "அவரை நான் உடனே பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லு" என்றார் தன் சீடனிடம்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors