தமிழோவியம்
கவிதை : வீரன்
- சுரேஷ், சென்னை

நேற்றிரவின் உறக்கத்தில் வீரனொருவன் கனவில் வந்தான்
வீரனிடம் நான் கேட்ட கேள்விகளும்  அவனின் பதில்களும் !

வீரனே நீ யார் ?
அகில உலக சுதந்திர போராட்ட வீரர்களில் நானும் ஒருவன் !

நீ ஏன் எனை காண கனவில் வந்தாய் ?
எனக்கு பிடித்த ஒரு கவிஞன் நீ !
கனவில் வரத்தான் என்னிடம் நேரமுள்ளது !

நான் கவிஞனா ?
வாளின் அழகை விட அதன் கூர்மையை ரசிப்பவன் எனக்கு
உனது எழுத்தின் அழகை விட கருத்தின் அழகு மிக பிடிக்கும் !

இவ்வளவு கவிஞர்கள் இருக்க ஏன் எனது கனவில் மட்டும் வந்தாய் நீ ?

அதிகமாய் அழுதவன் நீ - கண்ணீரின் வலி தெரியும் உனக்கு
பல நாள் பட்டினி கிடந்தவன் நீ - பசியின் கொடூரம் தெரியும் உனக்கு
ஏழைமக்களை அதிகமாய் நேசிக்கிறாய் நீ - ஏழ்மையின் உச்ச வலி தெரியும் உனக்கு
உனது கவிதையில் கண்ணீரும் தீயும் சேர்ந்தே இருந்து
ஒன்றை ஒன்று அணைக்காத அதிசயம் கண்டேன்
அதனால் உனனிடம் ஓடி வந்தேன் !

ராணுவ உடை உனக்கு வியர்க்கவில்லையா ?
நாங்கள் வியர்க்க வேண்டும்; எங்கள் வியர்வையை இளம் காற்று தொட்டால் தான்
இதயத்தின் இரத்த வியர்வைக்கு சற்று குளிர் கிடைக்கும் !

நீ தீவிரவாதியா ?
இல்லை. எங்களை கொடுமை செய்வோர் எங்களை அழைப்பது அப்படி !
நான் ஒரு நிஜ சுதந்திர போராட்ட வீரன் !

நீ கொலைகாரனா ?
எங்கள் இனத்தோரை படுகொலை செய்பவரிடம் போரிட்டோம்
இரு கூட்டத்தினரிலும் பலர் மரணப்பட எங்களை மட்டும்
கொலைகாரர்கள் என்று உலக செய்தி முரசு கொட்டியது !

கொலை! - அது கொலை தானே ? கொலைகளுக்குப்பின் என்றாவது வருந்தியதுண்டா ?
ஒவ்வொரு முறையும் கதறுவோம் மரணப்பட்ட துரோகியின் குடும்பம் நினைத்து !
அன்றைய நண்பர்கள் தானே இன்றைய துரோகிகள்!

கதறிய நீ அழுததுண்டா ?
அழுவேன் ஆனால் கண்ணீர் தீர்ந்து விட்டது
பல நேரம் கண்களில் இரத்தம் சிந்தும் வலி உணருவேன் !

நீ ஏன் ஒரு எழுத்தாளர் ஆகவில்லை ?
ஒரு குவளை புகழ் மட்டும் காக்க வாழ்க்கையெல்லாம் இழப்பதை விட
புகழில்லா தியாகியாய் வாழ்ந்து வரும் கால சுதந்திர நாட்டிற்க்கு
விதையாக புதைவது  தான் என் கடமை  என்பதால் !

இயற்க்கையை பார்த்து; பெண் அழகு பார்த்து - கவிதை வரவில்லையா ?
இயற்க்கையை கண்டால்  வெறியர்கள் அழித்த
எங்கள் பூமியின் அல்ங்கோலங்கள் கண்டு
சிவக்கும் கண்கள் எனது எழுத்தை மட்டும் நிறுத்திவிடும்

எந்த பெண்ணை கண்டாலும் எனது தங்கையின் நியாபகம் வரும்!
அவளின் இடையழகு கண்டு அவளையும் அவளது தோழியர்கள் இருவரையும்
கர்ப்பழித்து கொலை செய்து தங்கையின் இடை சதையை ஏலம் போட்ட
துரோகிகளின் கொடுமை கண்முன்னே வந்ததும் கவிதை நின்று விடும் எனக்கு !

உன்னில் காமமே இல்லையா ?
சுதந்திர தாகத்தின் தீ எனது காமத்தை பஸ்மமாக்கிற்று
ஆயுள் கூடுமென்ற நம்பிக்கையில் கட்டில் மறந்து உணவு மேஜை தள்ளி வைத்தேன்
ஆனால் மரணத்தை கண்டு பயந்ததேயில்லை ! நேரிட என்றும் தயார் !
பயந்து பயந்து பலமுறை சாவதை விட தைரியமாக வாழ்ந்து
நிஜ மரணத்தை ஓரு முறை சந்திக்க நினைக்கும் வீரர்கள் பலரில் நானும் ஒருவன் !

நீ செய்வது தியாகமா ?
இல்லை !  அடுத்த வாரிசுகள் சுதந்திர காற்று சுவாசிக்க நாங்கள் செய்யும் கடமை !
மௌனப்போரில் நாங்கள் முடிவதும் சகித்து சகித்து அதன் உச்சத்தில் வெறியர்கள்
எங்கள் மேல் ஏறி நின்று உடல் மிதித்து ஆயுத தாக்குதல் நடத்தியபொழுது
எதிர்த்து அவனை வீழ்த்த ஆரம்பித்தது எங்கள் தர்மயுத்தம் !

அவர்களை மன்னித்து சமாதானம் பெற தயாரா ?
நாங்கள் தயார் ; ஆனால் அவர்கள் !

உங்களின் உணவு ?
இன்னொரு உயிரை கொன்று புசிப்பவன் மிருகமென்பதால்
எங்களுக்கு பிடித்தது சைவம் தான்!
ஆனால் சைவம் கிடைக்காமலிருந்தால் அசைவ உணவிருக்க
பட்டினி இருக்க மாட்டோம் !

உங்களின் தாங்க முடியா வலி ?
எங்களின் சொந்த பந்தங்களே எங்களை வெறுப்பது ! - அவர்கள்
எங்கள் துரோகிகளோடு எங்களை கொல்ல வருவது !

உங்களின் பொழுது போக்கு ?
பொழுதை இதுவரை போக்கியதில்லை நாங்கள் !
எங்கள் இனத்தை காப்பது தான் எங்கள் புழிதிக்கு நாங்களிட்ட சத்தியம் !

மது அறுந்துவீர்களா ?
எங்கள் இனம் அழிக்கும் வெறியர்களை விட மதுவை நாங்கள் வெறுக்கிறோம் !
மதுவை பயன்படுத்தி தான் எங்களில் சிலரை பகைவர்கள் தோற்க்கடித்தார்கள் !

உங்கள் இயக்கத்திற்க்கு பணம் ?
உண்மை அறிந்த அறிவுள்ள மனிதர்கள் சிலர்
பூமியில் சில நட்ச்சத்திறங்களாய்
வாழ்வதால் தான் எங்கள் போராட்டத்தில் இன்னமும் வெளிச்சம் !

மறக்க முடியா வேதனை சம்பவங்க்ளில் ஓன்று ?
என் கண் முன்னே எனது தாயையும் அக்காவையும் கர்ப்பழித்து கொல்லப்பட்ட
நிக்ழ்ச்சி மனதின் பின்புறம் இருக்க - ஓரு
போருக்கு பின் கொன்று குவிக்கப்பட்ட பிணங்கள் நிறைந்த சாலையில்
பிணங்கள் மீது காரோட்டி தப்பித்து வர வேண்டிய சூழ்நிலையில்
கண் மூடி சாலை கடந்தது !

தற்கொலை தவறு தானே ?
எனது சுதந்திர இயக்கத்தை நான் கொல்வதை விட எனது தற்கொலை மேல் !

பிள்ளைகளுக்கு படிப்பு ?
தேவையான அடிப்படை படிப்பு - பிறகு
அளவிற்க்கு அதிகமான் தியாக உணர்ச்சி ! அதையும் மீறின தேசப்பற்று !

ஒட்டுமொத்த உலக சுதந்திர போராட்டம் என்று தான் தீரும் ?
உலகின் இனி அடுத்த மனிதனின் பிறப்பு இல்லை
என்ற நாளில் வாழும் கடைசி மனிதனின் கடைசி மூச்சு நிற்க்கு வரை
என்று நினைக்க வேண்டிய கட்டாயம் !
ஆனால் எங்கள் இயக்கத்தின் ஆற்றலை சற்றே அதிகரிக்கச் செய்தால்
உலக மக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்!
கவிஞனே உனது நெருப்பு எழுத்துக்களும் எமக்கு தேவை !

ஒவ்வொரு தேசத்திலும் சுதந்திரம் கிடைக்கும் தொடரில்
வெற்றியின் கொடி நிறம் சிவப்பா ? 
எங்கள் இரத்தமெல்லாம் போராற்றில் ஒழுக்கிய பிறகு
உள்மனதில் அமைதி வெண்புறாவின் சாந்தம் தெளிய
எங்களுக்கு கண்டிப்பாய் தேவை வெள்ளைக் கொடியே !

உறக்கத்தின் போர்வை கிழித்து விழித்து பார்த்தேன்
வெள்ளை ஆடையில் பொட்டிழந்த எனது தாய் !
கையில் கருப்பு காப்பியோடு மகனே என்றழைத்து விழிக்க சொல்லி
வருகின்ற தரிசனம் கண்டேன் !
அந்த தரிசனத்தில்
"வெள்ளைக் கொடிகள் உலகம் எங்கும் பறக்க " - பிரார்த்தித்தேன் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors