தமிழோவியம்
கவிதை : கவிதையாய் ஒரு சேதி
- சிலம்பூர் யுகா, துபாய்


எப்போதும்
என்னை நேசிக்கும் கணவனே
கட்டிலிலும்
கொஞ்சம் காதல்கொள்!

உனது
அதிவேக ஈடுபாடும்
அவசர அசதியும்
எப்போதும் பிடிக்கவில்லை.

நீ
தீக்குச்சிமாதிரி
பட்டென்று பற்றிக்கொள்கிறாய்
இதமான வருடல்
மிதமான சில நெருடல்
சுகமான நீண்ட தேடல்
என்னுள் தீமூள
இவையெல்லாம் தேவைப்படுகிறது!

நீ
தீயென்றால்
நான்
தீத்தாங்கும் பாத்திரம்.

நீ
தீர்ந்த பின்னும் கூட
என்னுள்
தீ மீதமிருக்கிறது.

கட்டிலில் வன்முறை
எனக்கும் பிடிக்கும்
போராட்டமாய் இருந்தால்
தோற்பதா இலக்கு
என்னையும்
தோற்கடிக்கவேண்டாமா?

காம களத்தில்
உதட்டைவிட
கொடூரமான ஆயுதம்
வேரொன்றுமில்லை!

என்னில் தேடித்தேடி
அமுதம் எடு!
இறுதியில்
என்னுள் கொஞ்சம்
அமிலம் கொடு!

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors