தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : பஞ்சாங்கத்தில் போட்டிருப்பது பிழையா?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

நாம் இப்போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகின்றோம். எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியும். மேஷராசிக்கு சூரியன் எப்போது வருகிறாரோ அப்போதுதான் சித்திரை மாதம் பிறக்கிறது என்கிறோம்.  அதேபோல் ரிஷபராசிக்கு சூரியன் வரும்போது வைகாசி மாதம் பிறந்து விட்டது என்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு ராசிக்கும் சூரியன் வரும்போது ஒவ்வொரு மாதம் பிறந்து விட்டதாகக் கூறுகிறோம். உண்மையில் சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் சூரியன் சஞ்சாரம் செய்கிறாறா? பஞ்சாங்கத்தில் அப்படித்தானே போட்டிருக்கிறது. 

வானவியில் சூரியன் நடுவில் இருப்பதாகவும் அதை மற்ற கிரகங்கள் சுற்றுவதாகவும் அல்லவா கூறுகிறது. சூரியக் குடும்பம் அவ்வாறுதானே இருக்கிறது.  அப்படி இருக்கும்போது சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசம் செய்கிறார் என பஞ்சாங்கத்தில் போட்டிருப்பது பிழையா?  பிழையான ஒன்றை எல்லப் பஞ்சாங்கங்களும் போடுமா?

நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நாம் சூரியனைச் சுற்றுவது தெரியவில்லை; மாறாக சூரியன் நம்மைச் சுற்றுவதுபோல்தான் தெரிகிறது.  இது ஒரு தோற்றம்தான்.  நாம் நடுவில் இருப்பதுபோலவும் சூரியன், மற்றும் இதர கிரகங்கள் நம்மைச் சுற்றுவதும் போலத் தோற்றம் அளிக்கிறது.  இந்த மாதிரித் தோற்றம்தான் நம் பஞ்சாங்கங்களில் கணிக்கப் படுவது.

பூமியை சூரியன் சுற்றும் பாதையை ஆங்கிலத்தில் Ecliptic என்றழைப்பார்கள்.  இந்தப் பாதைதான் வான மண்டலம் என்பது.  அதாவது 12 ராசிகள் அடங்கிய வான மண்டலமாகும்.  இந்த வான மண்டலத்தைச் செவ்வகமாகப் போட்டு அதில் கிரகங்களை இட்டு நிரப்பி ராசி  என்றழைகின்றோம்.  இந்தக் கட்டம்தான் ஜாதகத்தின் உயிர் நாடி. பலன் சொல்ல உதவுவது.

ஆகவே சூரியன் சூரியன் நம்மைச் சுற்றுவதுபோல் தோன்றுவது வெறும் தோற்றமே தவிர உண்மையல்ல.

Copyright © 2005 Tamiloviam.com - Authors