தமிழோவியம்
கவிதை : என்னவள் - இதனால் உனைப் பிடிக்கும்
- லெனின்

கற்பு விசயத்தில் நீ நெறுப்பு!
இந்த விழிப்பு எனக்குப் பிடிக்கும்!

கரும்பட்டை தீட்டி விரிந்திருக்கும்
உன் விழிப்பூவை எனக்குப் பிடிக்கும்!

உனக்குப் பாதி! எனக்குப் பாதி - என
'கம்யூனிசம்' பேசும் உன் கன்னங்கள் பிடிக்கும்!

மூக்குத்தியால் ஒளிர்ந்து
கோபத் தீயால் சிவக்கும்
என்னை மோப்பம் பிடிக்கும்
உன் மூக்கைப் பிடிக்கும்!

என்னைக் கண்டால் புன்னகை அணிந்து
பூத்துக் குலுங்கும் உன் பூ இதழ்கள் பிடிக்கும்!

சிரிப்புச் சாரலுடன் சங்கீத அருவியாய்
குயிலுடன் போட்டி போடும் -உன்
கும்மாளக் குரலைப் பிடிக்கும்!

உன்  பின்னே நான் வந்தால்
ஆனந்தத்தில் ஆடி மகிழும் - உன்
அடங்காத கூந்தல் பிடிக்கும்!

உன் விழிச் சூட்டால் கறுத்து
அழகு நிலையத்தால் உடல் சிறுத்து
மெலிந்திருக்கும் - உன்
மெல்லிய புருவம் பிடிக்கும்!

உன் நெற்றிக் குளத்தில் பட்டு ஒளிரும்
நான் வைத்த - உன்
குங்குமப் பொட்டு பிடிக்கும்!

இப்படி,
அனைவர் மனதையும் கவரும்
என்னை கண்டால் மட்டும் கொஞ்சம் கூட மலரும்
வெட்க முகிழ் மறைத்தும் வெளி வந்து ஒளிரும் - உன்
வெண்ணிலா முகம் பிடிக்கும் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors