தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : வரும்முன் காப்போம், வருவதைத் தடுப்போம்
- பத்மா அர்விந்த்

Breast Cancer Logoஅக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன். நீங்களோ, உங்கள் மருத்துவரோ அறியும் முன்ணே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உங்களைக் காப்பற்றுவதோடு, உங்கள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

  • உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அதனால், வலி இருக்க கூடும்.
  • பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள். இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.
  • உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.
  • மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.
  • நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.
  • ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.
  • நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும். நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப்படும். அவர் உங்கள் படங்களில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

உங்களில் எத்தனை பேர் மார்பக நிழல் படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களை நிம்மதியாக்கிய விஷயம்/நிகழ்ச்சிகள் பற்றி உரையாட வாருங்கள். மார்பக நிழல் படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை  செய்யப்படுகிறாள். இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.
 
மார்பக நிழல் படம் எடுக்க ஆகும்  செலவு:

 • வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.
 • இவை தனியார் இன்சுரன்சு அல்லது  மெடிக்கர் மூலம் கட்டப்படும்.
 • சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.

உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக்  கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்காள்ள வேண்டும் என்பதயும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து  கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி  பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின்  செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

நீங்கள் 1-800-4-CANCER அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து  கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். இது உங்கள் வாழ்வு.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி : ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 சார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors