தமிழோவியம்
அடடே !! : காலம்/நேரமும் உறுப்புகளும்
-

விடியற்காலை

3-5 மணி - இந்த நேரத்திற்குள் விழித்தெழுவது சாலச்சிறந்தது. காற்றில் ஓஸோனின் அளவு இந்நேரத்தில் மிக அதிகமாக இருக்கும். இப்போது யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை ஒருவர் செய்யும் போது புத்துணர்ச்சி பெறுகிறார். ஆஸ்துமா நோயாளிகள் இந்நேரத்தில் உறங்க முடியாமல் மூச்சுத்திணறலால் தவிப்பர்.

காலை

5-7 மணி- பெருங்குடல்- இந்நேரத்தில் எழும் பழக்கம் உடையவர்களுக்கு மலச்சிக்கல் வராது. இப்போது காலைக்கடனை முடித்துக் குளிக்கும் ஒருவருக்கும் நரம்புத் தளர்ச்சி வராது.


7-9 மணி - வயிறு - பசியாறுவதற்கு ஏற்ற நேரம்

9-11 மணி - மண்ணீரல் - இந்நேரத்தில் உண்பது ஏற்புடையதன்று. தவிர்க்காமல் உண்பவரின் உடல் சீதோஷணம், சோர்வு கூடி செரிமானசக்தி குறையும். முக்கியமாக நீரிழிவு (டையாபடிக்ஸ்) நோயாளிகளுக்கு படபடப்பு, மயக்கம் போன்றவை வர வாய்ப்புண்டு

நண்பகல்

11-1 மணி - இதயம்- இந்நேரத்தில் தண்ணீர் மட்டுமே அருந்தவேண்டும். கடுமையான வேலைச்செய்வதும் கூடாது. தூங்குவதும் கூடாது. இல்லையென்றால், அதிக கார்பன் டையாக்ஸைட் ரத்ததில் கலந்து உடல் வலி, ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் போன்றவை வரலாம். இதனால்தான் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இந்நேரத்தில் அதிகக் கவனமாக இருப்பார்கள். இதய மற்றும் நீரிழிவு (டையாபடீஸ்) நோயாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் மாற்ற நேரத்தை விட அதிகம் வரும் நேரம்.

முற்பகல்

1-3 மணி - சிறுகுடல்- மதிய உணவிற்குப் பிறகு கண்களை மூடிக்கொண்டாவது ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். தூக்கம் தவிர்க்கவும்.

பிற்பகல்

3-5 மணி-சிறுநீர்பை- டீ, காபி அல்லது பழரசம் அருந்த ஏற்ற நேரம்

மாலை

5-7 மணி - கிட்னி- இது ஓய்வுக்குரிய நேரம். தொடர்ந்து வேலையில் ஈடுபட்டால், சிறுநீர் தொடர்புடைய நோய்களுக்கு ஆளாகலாம்.

முன்னிரவு

7-9 மணி- இதயம் (heart wall) - இந்நேரத்தில் இரவு உணவை முடித்திருக்கவேண்டும். இல்லையானால், படபடப்பு, இதய வலி போன்றவை வரலாம்.

பின்னிரவு

9-11 மணி -உடல் வெப்ப அளவு அதிகரிக்க வேண்டிய வேளை- காலையிலிருந்து செயல்பட்ட உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். தூங்கப்போகவேண்டும். டீவீ பார்த்தல், வாசித்தல், வேலை செய்தல் போன்றவை தவிர்க்கவேண்டும்.

நள்ளிரவு

11-1 மணி -கல்லீரல் - தூங்க வேண்டிய நேரம். இந்நேரத்தில் உறங்காதவர்கள் அடுத்த நாள் வேலைக்கு வலுவில்லாமல் தவிப்பர்.

பின்னிரவு

1-3 மணி - ஈரல் - இது ஆழ்ந்து தூங்க வேண்டிய நேரம். இல்லையானல், கண் பார்வை பாதிக்கப்படும். மற்றும் உடல் அசதி ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பட்டியலின் படி பின்பற்றி நடந்து, யோக முறைகளையும் கடைபிடித்தால், ஆரோக்கியம் மிளிரும். இவை யோக சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors