தமிழோவியம்
துணுக்கு : படித்ததில் பிடித்தது
-

இணையத்தில் படித்த சில சுவாரஸ்யமான துணுக்குகள் ...

நான்கு எறும்புகள் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தன. எதிரே ஒரு பெரிய யானை ஒன்று வந்து கொண்டிருந்தது.

அதைப்பார்த்த முதல் எறும்பு,

வாங்க நண்பர்களே அதை கொன்றுவிடலாம் என்றது.

இரண்டாவது எறும்போ, கொல்ல வேணாம் அதன் முன்னங்கால்களை உடைத்து விடலாம் என்றது.

மூன்றாவதோ அட, அதெல்லாம் வேணாம் யானையை நன்றாக மிரட்டிவிட்டு போகலாம் என்றது.

கடைசியாக வந்த எறும்போ, அட விடுங்கபா நாம நாலு பேரு அவன் ஒருத்தன் பாவம் பொழச்சுபோகட்டும்  என்றது.


வாய் மூடாமல் பேசும் மனைவியை பார்த்து

முட்டாள் கணவன், "சரி சரி வாயை மூடு" என்பான்.

புத்திசாலி கணவனோ, "உன் இதழ்கள் சேர்ந்திருக்கும் போது கொள்ளை அழகு" என்பான்.


பெண்கள் ஆண்களை போல் வெற்றியாளர்களாய் வருவதில்லையே ஏன் ?

ஏனெனில் அவர்கள் பின்னால் அவர்கள் மனைவிகள் இல்லை.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors