தமிழோவியம்
கவிதை : பிரிவின் உணர்வுகள்
- சுரேஷ், சென்னை

  மனைவியே !

  முன்னதாக நீ சென்றால்
  உடனே
  எனை அழைத்திடுவாய் என்றாயே ?

  பத்து வருடமாச்சே !
  பூமியில் இன்னமும் நான் உயிருடன் சாகிறேன்
  நீ இல்லாமல்.

  உனது பிரிவில் உனதருமை
  உருக்கமாய் உண்ர்ந்துவிட்டேன்

  உன் வார்த்தை படி
  உடனடி எனை அழைத்துச்செல்

  பூமியில் மரித்து
  உன்னுடன் ஜனனமாகத்  துடிக்கிறேன்

  என் கண்கள்
  இனிமேலாவது
  ஆனந்த நதியை காணட்டும்

  வாள் இழந்த வாள் உறை
  கவிதை மலரா கவிஞன்
  இது தான் நீயில்லாத நான்
  வீரமே கவிதையே
  எனை எடுத்துக்கொள்

  கணவன் இழந்த மனைவியின்
  கண்ணீர் வாழ்க்கையில்
  ஒரே ஒரு மரணம் - ஆனால்

  மனைவி இழந்த நல்ல கணவணுக்கோ
  கண்ணீர் மறைத்த வாழ்க்கையில்
  ஒவ்வொரு நொடியும் மரணம்

  செடிகளிடமும் பூக்களிடமும்
  உறங்கின கட்டிலிடமும்
  எனக்கு பதில் சொல்ல முடியவில்லை

  பத்து வருட தோல்வியின்
  தகுதியோடு கேட்க்கிறேன்
  எனை உடனடி எடுத்துக்கொள்

  உனை நான் கண்டதும்
  கேட்ப்பது முத்தமல்ல....
  உனது
  காலில் விழுந்து மன்னிப்பு !

Copyright © 2005 Tamiloviam.com - Authors