தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : ப்ளூ ஜுரம்
- பத்மா அர்விந்த்

மழையும் காற்றும் அடிப்பது ஒருபுரம் என்றால் வழக்கம் போல அமெரிக்கா இன்னொரு ப்ளூ சுர காலத்திற்கு தயாராகிவிட்டது. ஒரு காலத்தில் இதனால் உயிரிழந்தவர்கள் எண்னிக்கை அதிகமாகி புதைக்க மயானத்தில் இடமில்லை தவித்த நிலை மாறி இருக்கிறது. அலுவலகம், பள்ளி, மருத்துவர்கள் என்று எல்லோரும் தயாராக இருக்கிறார்கள் தடுப்பூசி வழங்க. ப்ளூ ஏன் இந்த பாடு படுத்துகிறது என்பதை பார்ப்போமா?

இன்புளுயன்சா என்ற வைரஸ் தக்குதலால் வரும் ஒருவித சுவாச மண்டலத்தை பாதிக்கும் காய்ச்சல் ப்ளூ என்ற ழைக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கபடும் அளவு பாதிப்பு ஏற்படுவதால் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

வருடம் தோறும் அமெரிக்காவில், 5-20% மக்கள் இதனால் பாதிக்க படுகிறார்கள். கிட்டதட்ட 200,000 பேருக்கும் அதிகமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் 36,000 பேர் இறந்து போகிறார்கள். இது எளிதில் தொற்றிகொள்ளக்குடியதாகையால் பரவுகிறது.

சில அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல் வலி, களைப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாஅகும். சிறிய குழந்தைகளுக்கு வயிற்றுக்கோளாறுகளும் வர வாய்ப்பு உண்டு.

ப்ளூ இதயத்தை தாக்க கூடியது. நிமோனியா வரவும் அதிக வாய்ப்பு உண்டு. ஒருவர் நோய்க்கான அறிகுறிகள் வரும் முன்பிருந்து நோய் குணமாகி 5 நாட்கள் வரை மற்றொருவரை நோய்க்குள்ளாக்கலாம் (infectious). ஒருவரின் சுவாசக்காற்று, இருமல் இவற்றிலிருந்து வெளியேறும் சில குமிழ்கள் மற்றொருவர் உடலுக்கு செல்வதால் நோய் ஏற்படுகிறது.
ப்ளூவிற்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் மாதம், நவம்பர் மாததில் தடுப்புசிகள் போட்டு கொள்வது சிறந்தது. சில இதய நோய் உள்ளவர்கள், ஆஸ்த்மா மற்றும் சுவாச நோய் உள்ளவர்கள், 65 வயதுக்கும் மேலானவர்கள், சிறிய குழந்தைகள் இவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுகொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் 50லிருந்து 64 வயதிற்குள்ளான மக்களும் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள்,முட்டைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டதால் ஒவ்வாமை வந்து அவதிப்பட்டவர்கள் போன்றவர்கள் இந்த தடுப்பூசி போட்டு கொள்ள கூடாது.

ஜுரம் இருக்கும் போது வீட்டைவிட்டு வெளியே போகாதீர்கள். அதேபோல குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். ஜுரத்தினால் வரும் கோளாறுகள் குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கு மேலானவர்களுக்கும் அதிகம். மேலும் ஏற்கெனவே உடல் நலம் சுகம் இல்லாதவர்கள் இதய நோய் உள்ளவர்கள் இவர்களை அதிகம் பாதிக்கும்.

அதேபோல 4 வயதுக்குள்ளான குழந்தைகள், மருத்துவமனையில் ஒவ்வொரு 100,000 பேரில் 500 பேர் சேர்க்கபடுகிறார்கள். இதில் அதிக அபாயம் உள்ளவர்கள் ஒவ்வொரு 100,000 பேரில் 100 பேர். 2000 இல் கிட்டதட்ட 54,000 பேரிலிருந்து 43,0000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள். 226,000 பேர் இந்த ஜுரத்தால் பாதிக்கப்பட்டு வருடாவருடம் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்கள். அதில் 63% ஆனோர் 65 வயதுக்கும் மேல் உள்ளவர்கள். 1968இல் நடந்த இன்ப்ளுயன்ஸா A (H3N2) தொற்றுநோய் பரவலுக்கு பின் அதிகமானோர் இந்த வகை கிருமிகாளாலேயே இன்னமும் பாதிக்கபடுகிறார்கள்.

இன்ப்ளுயன்ஸா கிருமி நிமோனியா, இதய நுரையீரல் இவற்றை பாதிக்கும் கோளாறுகளை உண்டாக்குவதால் உயிருக்கு ஆபத்தான நிலை வர வாய்ப்பு இருக்கிறது.

Fluகுழந்தைகளுக்கு இருமும் போதோ தும்மும் போதோ ஒரு கைக்குட்டையாலோ அல்லது டிஸ்யுவாலோ மூடிக்கொள்ள சொல்லி தாருங்கள். பயன்படித்தியவற்றை குப்பையில் போடவும்,அதை உடனே அப்புறப்படுதவும்

சமையல் செய்யும் முன், சாப்பிடும் முன் கைகளை கழுவுதல் அவசியம். இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது அதுவும் காரில் இருந்த படியே டிரைவ் இன்னில் சாப்பிடும் போது. இந்த நேரத்தில் ஜாக்கிரதை தேவை.

குளிர்காலத்தில் ஒரு கனமான கம்பளி ஆடை உடுப்பதைவிட்டு நான்கைந்து அடுக்குகளாக அணிவது உடல் வெப்பநிலையை பாதுகாக்க உதவும். வீட்டில் வயது வந்த பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தால், மருத்துவ காப்பீடு இல்லை என்றால் அருகில் உள்ள பொதுநலத்துறைக்கு தொலை பேசுங்கள். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள இடத்தில் எப்போது இலவச தடுப்பூசிகள் வழங்கப்படும் நேரம் கேட்டறிந்து அழைத்து கொண்டு செல்லுங்கள்.

இந்த வருடம் பறவைகளிலிருந்து பரவக்கூடிய ஒருவித ஜுரம் உலகத்தின் பல நாடுகளை பாதிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இப்போதைக்கு ஆணித்தரமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் கூடியவரை பாதுகாப்பாக இருப்பது நன்மை பயக்கும்.

பொதுவாகவே உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின் C உள்ள பழங்களை உண்பதும் காய்கறிகளை உண்பதும் நல்லது.

நான் இதுவரை மருத்துவரிடமே சென்றதில்லை, என்ன உடம்புக்கு வந்தாலும் கடமை தவறாமல் அலுவலகம் செல்பவர் என்று அலுவலகம் சென்று அடுத்தவரையும் ஆபத்தில் ஆழ்த்தாதீர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors