தமிழோவியம்
கவிதை : எழுத்துக்கள்
- சுரேஷ், சென்னை

 எனக்கும் ஒரு நாள் மரணம் வரும்
 இறைவன் பாதம் சேர்வேன்
 மரணபயமில்லை

 அன்றும் வெள்ளை ஆடையில் எனதுடல் -அதில்
 பூமாலைகள் பூக்களாகும்.

 சுற்றிலும் அழுகையின் சத்தம்
 நிரந்தர உறக்கத்தில் நான்

 தாய், மனைவி இருவரின்
 கண்ணீர் பிரவாகம்
 பனிமலையாகும்

 "எனை பிரிந்து போகிறாயே"
 உருகும் உடன் பிறவா சகோதர கூட்டம்

 தாங்க முடியா கவலையில் நண்பர்கள்

 "சிரிக்க வைத்தவன் சிந்திக்கவைத்தானே"
 கதறும் சொந்த பந்தங்கள்

 அன்றும் எனை பாசமாய் முத்தமிடும்
 ஆசிரிய தெய்வங்கள்

 மழலை செல்வங்களின் முத்தங்களால்
 ஈரமாகும் என் முகம்

 எனது முதல் புத்தகமும் கடைசி கவிதையும்
 மார்பில் குடியேறும்

 அன்று வரை காணாத சில ரசிகர்கள்
 புதைய போகும் எனை
 புகைப்படத்தில் அள்ளி எடுப்பார்கள்

 கிறிஸ்தவ பாடல்கள் முழங்க
 பாதிரியாரின் கடைசி ஆžர்வாதம்

 இறுதி படுக்கை மூடியதும்
 மண்ணால் எனக்கு பூமழை

 அன்று முதல்
 கவிஞன் எந்தன் எழுத்துக்கள்
 கண்டிப்பாய்
 பிரபலமாகும்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors