தமிழோவியம்
கட்டுரை : தமிழ்ச்சிதறல்
- பாஸ்டன் பாலாஜி

'பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?' புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது இதை வலைவாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் மேலும் தெளிவு பெறலாமே என்று தோன்றியது. சில கேள்விகள், சில நினவூட்டல்கள், சில வீட்டுப்பாடங்கள்.

புத்தக விபரம்: 'பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?' - ஜெ. ஸ்ரீசந்திரன்
வர்த்தமானன் பதிப்பகம் / விலை ரூ. 150/-

1. அ, இ, உ : என்னும் இம்மூன்று உயிரெழுத்துக்கள் சுட்டுப்பொருளை உணர்த்தி வரின் சுட்டெழுத்துக்கள் ஆகும்.

2. ஆ, எ, ஏ, ஓ : என்னும் இந்நான்கு உயிரெழுத்துக்களும் 'யா' என்னும் உயிர்மெய்யெழுத்தும் வினாப்பொருள் உணர்த்திவரின் வினா எழுத்துக்களாகும்.

3. ஒன்று என்னும் சொல் எந்த இடங்களில் 'ஓர்' என்னும் வடிவத்தையும், எங்கு 'ஒரு' என்னும் வடிவத்தையும் பெறும், என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒரு, ஓர் போலவே அது, அ·து என்பனவும் எங்கு எப்படி பயன்படுத்தவேண்டும் என்று அறிவீர்களா?

4. ஹரியின் 'கோயில்' படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம். 'கோயில்' என்பது இலக்கணப் போலியாகும். கோவில் என்பதே இலக்கணப்படி சரியான - பிழையற்ற சொல்.

5. அணங்கு என்றால் 'பெண்'ணைக் குறிக்கும். 'அனங்கு' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தால், என்ன அர்த்தம் வரும்? 'மாரன்' என்னும் பொருள் மாறிப்போவதால் கவனமாக இருக்க வேண்டுமாம். ('மாறன்' அல்ல.)

6. 'கண்ணன் ஊரிலிருந்து சென்றான்' என்ற வக்கியத்திற்கும் 'கண்ணன் ஊரில் இருந்து சென்றான்' என்ற வாக்கியத்திற்கும் வேறுபாடு உண்டு.

7. வீரப்பன் காட்டில் இல்லாத்தால் யானை 'பிளிறும்'. என்றுமே சென்னையில் காக்கை 'கரையும்'. பல்லி? (கெச்சிடும்).

8. பிழை திருத்துக: நம் பாரத நாடு பழம் பெரும் நாடு என்று யாவரும் அறிவர்.

9. வடசொல்: அகிலநாயகன்; தமிழ்ச்சொல்: முழுமுதல்வன்.
அட்சரம் - எழுத்து.
அகந்தை - இறுமாப்பு

10. பழமொழி: அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது. (என்ன அர்த்தம்/கதை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லமுடியுமா?)

Copyright © 2005 Tamiloviam.com - Authors