தமிழோவியம்
அடடே !! : "க்ரையோஜெனிக்" என்ஜின் - இந்தியா வெற்றி
-

KasturiRanganஇந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் மேற்படி என்ஜினை முதற்கட்ட சோதனை நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.  இந்த என்ஜின் சுமார் 35,000 கிலோ மீட்டர் வரையில் ராக்கெட்டுக்களைக் கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.  இந்த என்ஜினை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளே தயாரிக்கின்றன.  இந்தியா
இத்தகைய தொழிற் நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து தெரிந்து கொள்ள விழைந்தது. ரஷ்யாவும் நமக்குச் சொல்லிக் கொடுக்க முன் வந்தது.  ஆனால் அமெரிக்க அதற்கு முட்டுக்கட்டை போட்டது.  இந்தியாவிற்கு அந்த தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கும் ரஷ்யா சம்மதிக்க விட்டால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அளவுக்கு அமெரிக்கா சென்றது. இந்தியா இத்தகைய என்ஜினைப் பெற்று விட்டால் அதை ராக்கெட்டுகளில் அணுகுண்டுகளை வைத்துச் செலுத்த முடியும் என்று அமெரிக்கா கணித்தது. 

கடைசியில் இந்த மிரட்டலுக்கு ரஷ்யா பணிந்தது.  அந்தத் தொழில் நுட்பத்தை இந்தியா விற்குச் சொல்லிக் கொடுக்கவே இல்லை;  ஆனால் அப்போதே இந்தியா சுய முயற்சியில் தன்னால் இத்தைகைய என்ஜினைத் தயார் செய்ய முடியும் என்றும், ஆனால் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கூறியது. 

அதன்படி இந்தியா முதற்கட்ட சோதனை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. வாழ்க இந்தியாவின் முயற்சி. வாழ்க விஞ்ஞானிகளின் சாதனை.  சோதனைகளில் சாதனை படைப்பதே பெறுமை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors