தமிழோவியம்
அறிவிப்பு : பரிசு பெற்ற கொலு
-

Dr. Sujata Subramaniamவெப்உலகம்.காம் நடத்திய நவராத்திரி சிறப்பு கொலு போட்டியில், நியுஜெர்சியை சேர்ந்த Dr. சுஜாதா சுப்பிரமணியம் அவர்களின் கொலு சிறந்த கொலுவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் பிறந்து, கொல்கத்தாவில் வளர்ந்து, அமெரிக்காவில் குடியேறி 22 வருடங்கள் ஆனாலும் இந்திய பாரம்பரியத்தை மறக்காமல், தன் மருத்துவ பணிகளுக்கிடையே அந்நிய மண்ணில் சிறப்பாக கொலு வைத்து பரிசை பெற்றுள்ள Dr. சுஜாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 

 வெப் உலகம்.காமில் வெளிவந்த செய்தி ..

நவராத்திரி கொலு போட்டி : வெற்றியாளர் தேர்வு!
   
அன்புள்ள வெப்உலகம் வாசகர்களே,

நவராத்திரியை முன்னிட்டு ஆன்மீகம் - நவராத்திரி கொலு போட்டியில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.

உங்கள் வீட்டில் வைத்த கொலு அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் வைத்த கொலு அல்லது நீங்கள் பார்த்து ரசித்த கொலுவின் சிறந்த புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளை அக்டோபர் 20-ம் தேதிக்குள் எங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வையுங்கள் என்று அறிவித்திருந்தோம்.

அதன்படி நவராத்திரி கொலு போட்டியில் நிறைய வாசகர்கள் பங்கு பெற்று தங்கள் வீட்டில் வைத்த கொலு புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் எங்களது தேர்வுக் குழு மூலம் ஒரு வாசகரை தேர்வு செய்துள்ளோம்.

தேர்ந்தெடுத்த புகைப்படங்களை இங்கே நீங்களும் பார்த்து மகிழ உங்களுக்காக பிரசுரித்துள்ளோம். 

கொலு போட்டியில் வெற்றி பெற்ற வாசகரின் முகவரி :

Ravi Subramanyam / Dr. Sujata Subramanyam
18, Doyle Lane
Belle Mead
NJ 08502
(908)-904-9625

வெற்றி பெற்ற கொலுவை பார்த்து ரசிக்க, சுட்டி இதோ..

http://www.webulagam.com/religion/article/2005/1103_golu_contest.htm

Copyright © 2005 Tamiloviam.com - Authors