தமிழோவியம்
சமையல் : வாழைக்காய் வடை
- மீனா

வாழைக்காய் வடை

தேவையானவை

வாழைக்காய் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைப் பயறு - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாழைக்காய்களை தோல் நீக்கிவிட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊறவைத்து பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வாழைக்காயை நன்கு மசித்து கலந்துவிடுவும்.
இவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,  கொத்தமல்லி சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். புதுமையான வாழைக்காய் வடை ரெடி!மிளகு தோசை

தேவையானவை

புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு
பச்சரிசி - அரை ஆழாக்கு
உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு
வெந்தயம் - சிறிதளவு
நெய் - 50 கிராம்
மிளகு - 10
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பை தனியாக ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

பின்னர் இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை போனறவற்றை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து மாவுடன் கலந்து மஞ்சள் பொடி போட்டு கரைத்து மூடி வைக்கவும்.

எட்டு மணி நேரத்துக்குப் பிறகு, பொங்கி வந்த மாவில் மிளகைப் பொடித்துப் போட்டு கலந்து தோசை வார்க்கவும். தீபாவளி அன்று பலவிதமான பட்சணங்களையும் சாப்பிடுவதால் ஏற்படும் அஜீரணத்திற்கு மிகவும் நல்லது இந்த மிளகு தோசை. தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அல்லது தக்காளி தொக்குடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors