தமிழோவியம்
துணுக்கு : குறைவான தூக்கம் - கூடும் எடை
-

ஐந்து மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூங்குபவர்கள் உடல் அதிக அளவில் பருமனாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகம் 32 முதல் 59 வயதுள்ளவர்களை வைத்து நடத்திய ஆய்வு முடிவுகளில் ஐந்து மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாகத் தூங்குபவர்களது உடல் எடை கணிசமான அளவில் கூடுகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

குறைவாகத் தூங்குபவர்கள்தான் அதிக அளவில் கலோரிகளைச் செலவிடுகிறார்கள் என்ற கருத்திற்கு நேர்மாறான கருத்தை வெளியிட்டுள்ள இவர்கள் அதற்கான அறிவியல் காரணங்களையும் கூறியுள்ளார்கள். நமது உடல் வேலை செய்யும் நேரத்திற்கு ஈடாக குறைந்த பட்சம் அதில் பாதி அளவிற்காவது நாம் நமது உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 7 மணி நேரத் தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானது. அவ்வாறு நாம் செய்யத் தவறும் போது ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் நமக்கு பசி அதிகமாகிறது. விளைவு உடல் பெருக்கத் துவங்குகிறது. எனவே நல்ல 7 மணி நேரத் தூக்கம் நிச்சயம் தேவை. இல்லையென்றால் குண்டு கல்யாணம் போல ஆகிவிடுவீர்கள்.

ஜாக்கிரதை!!!!

மேலும் விவரங்களுக்கு ..

Copyright © 2005 Tamiloviam.com - Authors