தமிழோவியம்
கவிதை : ஆலைக்குள் தமிழ்
- சிதம்பரம் அருணாசலம்

 

தொழிற்சாலைப் பகுதிக்குள்
தொடர்ந்திடும் உரையாடல்களில்
தக்கதோர் இடமின்றித் தமிழ்
தயங்கி நிற்கிறது.
இயந்திரங்கள் ஆனாலும் - அதில்
இரசாயணங்கள் சேர்த்தாலும்,
இயக்குகின்ற முறையானாலும்,
பழுதாகிப் போனாலும்,
பார்த்துச் சரிசெய்தாலும்
சொல்வதெல்லாம் ஆங்கிலத்தில்.
வெல்லத் தமிழ் ஓர் ஓரத்தில்.
இலக்கியப் பார்வை
போற்றப்படும் நேரத்தில்,
அறிவியல் பார்வையும்
அகண்டதாய் வேண்டும்.
அன்னைத் தமிழுக்கு
அதுதான் புத்துயிர் ஊட்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors