தமிழோவியம்
கவிதை : மொட்டுக்களின் மத்தியில் ஒரு பூ
- லெனின்

flowers
ஏ! மின்சார வாரியமே!
இனி அனலும் வேண்டாம்! அணுவும் வேண்டாம்!
என்னவளின் கண்ணில் எப்போதும்
இருக்கிறது இருபதாயிரம் வோல்டேஜ் மின்சாரம்!

ஏ! விஞ்ஞானிகளே!
'நட்சத்திரங்கள் எப்படி தோன்றின?' என இனி
நாளும் ஆராய்ச்சி செய்யாதீர்கள்!
என்னவள் இரவில் சிரித்தபோது சிதறி விழுந்த
முத்துக்களே அவைகள்!

மொட்டுக்களின் மத்தியில் ஒரு பூ!
அட, குழந்தைகளின் மத்தியில் என்னவள்!

அமைதி நீ! ஆனால் அணுகுண்டும் நீ!
சில சமயம்,
உன் பெற்றோருக்குக் கூட புரியாத கவிதையும் நீ!

வரைந்த ஓவியம் நீ! - அதே சமயம்
நாளுக்கு நாள் வளரும் ஓவியம் நீ!

எனக்கே தெரியாமல் - ஆனால் எனக்காக
யாரோ இருவர் செதுக்கிய சிற்பம் நீ!

இளங்கோவே! நீ இப்போது இருந்திருக்கக் கூடாதா?
இருந்திருந்தால், சிலப்பதிகாரம் படைத்திருக்கமாட்டாய்!
என்னவளின் சிரிப்பைக் கேட்டு 'சிரிப்பதிகாரம்' படைத்திருப்பாய்!

என்னையும் தாயாக்கப் போறவளே!
உன்னால் தான் என் இதயம்
கடந்த ஒன்பது மாதங்களாய்
முழுகாமல் இருக்குதடி!

இனிமேல், தயவுசெய்து இப்படி அழகாகச் சிரிக்காதே!
என் இதயம் கூட உன்னைப் பார்க்க வேண்டும் என நினைத்து
என் வாய் வழியே வந்து விடப் போகிறது!

என்ன இது?
நான் இதை எழுதும் போது
உன் இதயப் பூ வாசம் வருகிறதே!
ஓ! நீ விட்ட மூச்சுக் காற்றைத் தான்
நான் இப்போது சுவாசித்'தேனா? '

Copyright © 2005 Tamiloviam.com - Authors