தமிழோவியம்
நையாண்டி : தத்துவம் மாமே தத்துவம்
-

(இணையத்தில் அங்கும் இங்குமாக படித்தவைகளில் ரசித்தவை)

சீப்புல பல்லு இருக்கு ஆனா கடிக்காது
செருப்புல பல் இல்லை ஆனா கடிக்கும்

 

போலீஸ்க்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம் ?
"அடி-தடி" செஞ்சா பொறுக்கி
"தடி-அடி" செஞ்சா போலீஸ்

 

மின்னல பார்த்தா கண்ணு போய்டும்
பார்கலேன்னா மின்னல் போய்டும்

 

ஒரு மஞ்சள் கயிறு நம்ம கையில கட்டினா அது நமக்கு காப்பு
அதை ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா அது நமக்கு ஆப்பு

 

சிப்புக்குள்ள இருக்கு முத்து
ஒன்பதுக்கு பிறகு வருது பத்து
இப்படி தத்துவம் சொன்னதுக்கு உன் மூஞ்சில ஒரு குத்து

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors