தமிழோவியம்
துணுக்கு : சினி செய்தியும் - நம்ம கமெண்டும்
-

 

'வில்' படத்திற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார் எச்.ஜே.சூர்யா

- நீளமான தலைமுடியா ?அப்போ ரொம்ப வித்தியாசமான ரொல்னு சொல்லுங்க..

சத்யம் படத்தில் ஹீரோவாக மட்டுமில்லாமல் ஒரு உதவி இயக்குனராக பல வேலைகளை ஆர்வத்தோடு இழுத்து போட்டுச் செய்கிறார் விஷால்.

- பாத்துங்க ! அப்புறம் இயக்குனர் ரெண்டு சீன்ல வந்து பஞ்ச் டயலாக் அடிக்க போறார்.


Trisha, Vikramதான் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு "தில் தூள் புரொடக்ஷன்ஸ்' என்று பெயரிட்டுள்ளார் விக்ரம். முதல் படத்தை அநேகமாக விக்ரமை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக்கிய அவரது நெருங்கிய நண்பர் இயக்குனர் தரணிதான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

- சொந்த தயாரிப்பு படத்தையாவது சீக்கிரமா வெளியிடுங்க சீயான். ஜனங்க மறந்துட போறாங்க.


ஷாம், மல்லிகா கபூர் நடிக்கும் படத்திற்கு பெயர் "அந்தோனி -யார்?'. சி.டி. பாண்டி இயக்கும் அப்படத்திற்கு தினா இசையமைக்கிறார்.

- பாண்டி யார் னு ? கேட்கற மாதிரி அசத்துங்க.

ooOoo

விரைவில் வெளியாகும் திரைப்படங்கள்

- ஆர்யா, பூஜா நடிப்பில் தயாராகி, வெயிட்டிங்கில் இருந்த 'ஒரம்போ' படம் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

- ஜீவா, பாவனா நடித்த 'ராமேஸ்வரம்' வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.

- பள்ளிக்கூடத்திற்கு பிறகு தங்கர்பச்சான் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் சத்யராஜ் தனது லொள்ளு தனத்தை விட்டு மாறுபட்ட நடிப்பில் அசத்தியுள்ளாராம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors