தமிழோவியம்
சமையல் : சோயா - 2
- ஜெயந்தி நாராயணன்

சோயா தஹி பக்கோடா

தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ்  - 1/4கப்
பயத்தம்பருப்பு  - 1/4கப்
அரிசிமாவு- 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி- 1/2" துண்டு
பச்சைமிளகாய்  - 2
உப்பு - தேவைகேற்ப
சாட்மசாலா     - 1/2டீஸ்பூன்
கொத்துமல்லி   - 1/4கப் பொடியாக அரிந்தது
தயிர் - 3 கப்
எண்ணெய்- பொரித்தெடுக்க

செய்முறை

சோயபீன்ஸை 6 மணி நேரம் ஊறவிடவும். பயத்தம்பருப்பை 2மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டையும் மிக்ஸியில் இஞ்சி,பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து எடுத்து இத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் பக்கோடாவாக கிள்ளி சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தயிரில் சிறிது உப்பு,சாட்மசாலா சேர்த்து நன்கு கலந்து அதில் பொரித்த பக்கோடாவை போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். கொத்துமல்லி தூவி பரிமாற சுவையாக இருக்கும்.விரும்பினால் சிறிது மிளகு பொடியும் பரிமாறும் போது தூவி பரிமாறலாம்.சோயா ஸ்வீட் பால்ஸ்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 100கிராம்
சோயாமாவு    - 100கிராம்
பொட்டுகடலை மாவு - 100கிராம்
தேங்காய்துருவல் - 1/4கப்
ஏலக்காய்பொடி  - 1/4டீஸ்பூன்
எண்ணை- பொரித்தெடுக்க
வெல்லம் - 250கிராம்

செய்முறை

வெல்லத்தை நீர்விட்டு கரைத்து வடிகட்டி பாகு தயாரித்துக்கொள்ளவும். இளம் பாகு பதம் வந்ததும் இறக்கி வைத்து அதில் சோயமாவு மற்றும் பொட்டுகடலை மாவு,தேங்காய்துருவல், ஏலக்காய்பொடி சேர்த்து கட்டியில்லாமல் கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். கோதுமைமாவில் நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு எண்ணை காய்ந்ததும் உருண்டைகளை கோதுமை மாவில் தோய்த்து எடுத்து பொரித்து பொன்னிறமாக எடுத்துக்கொள்ளவும். சத்தாண குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்வீட் அயிட்டம் இது. கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் உடலுக்கு கேடு விளைவிக்காது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors