தமிழோவியம்
நையாண்டி : பேரைச் சொல்ல வா?
- ஷைலஜா

பெயருக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு என்கின்றனர் நியூமராலஜி நிபுணர்கள். நியூமராலஜி சிலருக்கு 'அச்சாஜி' சிலருக்கு'அலர்ஜி'!

பலருக்கு தங்கள் பெயரை யாரும் சரியாக உச்சரிக்கவில்லையே என்ற கவலை உண்டு

நான் கேள்விப்பட்ட ஒரு பெண்ணிற்கு நேர்ந்த அனுபவத்தைப் பாருங்கள்.


My full name is Kalaivani, but I call myself Kalai.(கலை)
 
I started hearing different versions of my name after coming to this country, (அமெரிக்கா) and the painful fact is all the possible permutations and  combinations of vowels in my name give meaningful words in tamil!!!

When I first joined the university, my professor wrote to me Dear KALAvani *(meaning: thief; context: kalavani paya.. களவானி)

சரி இதையாவது typo nu free யா விட்டுடலாம்

Then after a year, I joined a company for internship those people called me before I joined, to inform me about some test which I had to take

"Hello is this Ms. Kizhavaani?" *(meaning: old; context : kizha bolt..etc. கெழவானி)

"No..this is KALAIvaani"

"ohh..am sorry KALAvaani" (மறுபடியும்)

Then I decided, பெரிய பேரா இருக்கறதுனாலதானே இவ்வளவு  confusion?!! So, I started calling myself 'Kalai'..but the story continued

I joined my full-time position in another company recently. On  my first  day, we had a meeting

"Let's all welcome our new associate Ms. Kulai"  *(meaning: bunch; குலை)

CLAP! CLAP! CLAP! CLAP! Followed by smiles

அன்னிக்கு ஆரம்பிச்சது...

Once my boss and I were talking about a project. After finishing the meeting "Ok, *kali  (கலி) nice to have you here" *(meaning:
last yuga)

"That's KALAI" (எனக்கு இது தேவையா?)

"ohh kAALi?"(காளீ) *(meaning: goddess; context: badrakaali..)*

"hee hee very close" (podaannngggஸ்!!)

So, I stopped correcting my name after that.

One fine morning. I was working

Hey kiLai (கிளை)*(meaning: branch; context: marakiLai)*howz it going?"

"yea good" (சொல்லிட்டு சும்மா இருந்துட்டேன் எதுக்கு என் பேரைத்திருத்தி இவங்கிட்ட மல்லாடணும்னு)

"Is that how you say your name?" (ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா)

"uhhh  it's KALAI"  என்றேன்

"kolaai?" *(meaning:pump; context: kozhai adi sandai குழாய்)

"kolai?"  (கொலை?)*(meaning: murder; context: kolai panniduven..)*

"kaLai?" (களை)*(meaning: weed; context: kaLai pudinguradhu)*


"May be I'll get your name with practice   haha"

(இதெல்லாம் ரொம்ப ஓவர்டா..ரெண்டே எழுத்துதான் இதைசரியா சொல்லமாட்டிங்களா?). My friend came up with a brilliant idea!

அதாவது  compare my name with a word. So I started using this word 'kaleidoscope'; which has the same pronunciation as 'kalai'!

So, I started telling everyone 'kalai as in kaleidoscope'!  அப்படியும் ஒழுங்கா சொல்லக்காணொம் 'kalaai' *(கலாய்க்கிறது என்பதுபோல)

"hey kalaai!!"
"yea?"
"just  trying to say your name ha ha ha"
"ohhh how sweet!" (கசப்பான பொய் சொல்லிவைத்தேன் வேறுவழி?))

My net connection was down,so I called up the customer service என் போதாத காலம் அது சென்னை கால் செண்டருக்குப் போய்விட்டது எனக்கு அந்த விஷயமே தெரியாமல் நான் பாட்டுக்கு complete American accent ல் பேச ஆரம்பித்தேன்

"Your name ma'am?"
"Kalaai"
"What? Can you repeat ma'am?"
"Kalaai  as in kaleidoscope"
"I didn't get that ma'am. Can I have your number? I can check the records"
(அட சட்....and gave the number)

"ohh  kalaivani,(கலைவாணீ?) , கலைவாணீயா, right?" (in a sarcastic tone...என்னம்மா ஓவரா அலட்டறே என்று கேட்பதுபோல:.. அது ஒரு பச்சைத்தமிழனின் குரல் என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளுக்குள் நொந்துகொண்டேன்)

(அடப்பாவி மக்கா நீ நம்மூரா?)அன்று ஒரு குழந்தையின் நாமகரணத்திற்குப் போகவேண்டி வந்தது குழந்தைக்கு நிவ்ருத்தி என்று பெயர்வைத்திருந்தார்கள் பலர் நிவர்த்தி,நீ விருத்தி. நீருப்தி  என்றே சொல்ல ஒரு சிறுமி "நவராத்திரி" என்று மழலையில் கூறவும் எல்லாரும் சிரித்துவிட்டனர்.

"இதுக்குதான் அந்த நாளில் க்ருஷ்ணா ராமா சிவா முருகா'ன்னு பெயர் வைப்பாங்க சாமி பெயரை வாய் நிறைய அழைச்சா நல்லது இல்லயோ?" என்று
ஒரு வயதான அம்மாள்  சொல்லவும் ஒரு சிறுவன்"ராமனாதா?' என்றான் அவன் அப்பாவைப்பார்த்து.

"சாமியையே பேர் சொல்லி கூப்பிடலாம்னா அப்பா ஆசாமிதானே பேர் சொன்னா என்ன?" என்று கேட்டுவிட்டான்.

பெயரில் என்ன இருக்கிறது என்று சிலசமயம் தோன்றினாலும் சிலர் தங்கள் பெயரை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்

மதுரையில் தெரிந்த குடும்பநண்பருடன் அவரது அண்டைவீட்டுக் குழந்தை பெயரிடும் வைபவத்துக்குப்போனோம்  குழந்தை சிவப்பாய் அழகாயிருந்தான்  பெயர்கேட்டேன்," பெரிய கருப்பு" என்றாள் குழந்தையின் பாட்டி பூரிப்பாக.

"சிவப்பா இருக்கான் குழந்தை, கருப்புனு பேர் வச்சிருக்கிங்களே?'

அவ்வளவுதான் , பெருசு கடும் கோபத்துடன் என்னப்பார்த்து," இங்கிட்டு இருக்கற குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு பொறந்த புள்ளைம்மா இது..அதோட பேரை
கிண்டல் செஞ்சா உன்னை விடாது (அந்த) கறுப்பு" என்று எச்சரித்தாள்

ஒருகல்யாணத்தில் அந்த 70வயது முதியவர் வாசலிலேயே   பரிதவிப்பாக நின்றுகொண்டிருந்தார்.

நான்அக்கறையாய் விசாரித்தேன்

"என்னங்க மண்டபம் உள்ளே போகாமல் இங்கயே நிக்கறீங்களே? என்கூட வரீங்களா நான் அழைச்சிட்டுப் போகட்டுமா உங்களை?"

"இல்லைமா ஆட்டொவுல என்கூட வந்த பேபியக் காணம்மா.. " தொண்டை அடைக்க அவர் கூறினார்.

"ஐய்யெயோ..?" மனசுக்குள் ஆட்டோக்காரர் குழந்தையை கடத்திக் கொண்டு போய்விட்டது போலவும் அது கைகாலை உதைத்து அழுவது போலவும் காட்சிகள்
ஓட..

ஒருவார்த்தை பேச ஒருவருஷம் காத்திருந்தேன்.. என்று என் செல்போன் சொன்னது

"ஹலோ?"

2 நிமிஷம் பேசிமுடித்துவிட்டு திரும்பினால் அந்த முதியவர் முகம் பிரகாசமாயிருந்தது.

நான் அவரிடம்."சாரி சார்..போன் வந்திடிச்சி..பேபி விவரம் சொல்லுங்க நான் தேடிப்பாக்கறேன்" என்றேன் அவசர அவசரமாய்

"பேபி வந்தாச்சுமா..ஆட்டோக்கு சில்லரைகொடுக்க அம்பது ரூபாயை மாத்த பக்கத்துகடைக்குதான் போய்ருக்கு பேபி..நாந்தான் பயந்துட்டேன்.. கமான் பேபி..கல்யாணமண்டபம் உள்ளே போகலாம் நாம.." என்று கூறி அவர் கை பிடித்த பேபியை பார்த்தேன்

"ஓஹோ உந்தன் பேபி இதுதானா உந்தன் பேபி?" என்று அந்த 65வயது அம்மாளைப் பார்த்து என் வாய் முணுமுணுத்தது.


தவமாய் தவமிருந்து (சேரன்படம் இல்லீங்க நிஜமாவே) பத்துவருஷம் கழித்து ஒரு அழகான பெண்குழந்தை பெற்றாள் என் கன்னட  தோழி ஒருத்தி. குழந்தையின் முதலாவது பிறந்தநாளை தனது புது வீட்டில் கொண்டாடப் போவதாகவும் அவசியம் வரவேண்டுமென்றும் சொல்லி இருந்தாள்.

புறப்படும்போது அடுத்ததெருவிலிருந்து வித்யா போன் செய்து," என் தம்பி திவாகர் ப்ளஸ் டூ முடிச்சி லீவுக்கு வந்துருக்கான் அவனுடன் என் புத்திரபாக்கியங்களை அனுப்பிட்டு பத்து நிமிஷத்துல நான் உன் வீடு வரேன் நானும் நீயும் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டாள்

"உன் தம்பிக்கு நம்ம ·ப்ரண்ட் வீடு தெரியுமா?"

"சொல்லீருக்கேன் நாலாவது தெருல  மூணாவது புதுவீடு, வாசல்ல ஜெய்கலா னு க்ரானைட்ல பள பள னு பேர் இருக்கும்னு..'

"உன் தம்பி படா ஸ்மார்ட் ஆச்சே..நைஜீரியால இருந்தாகூட கண்டுபிடிச்சி  போயிடுவான்...உன் வால்களை அவன்கூட அனுப்பிட்டு நீ நிதானமா வா, நானும் நீயும் சேர்ந்து போகலாம்.."

இருவரும்  பட்டுபுடவை சரசரக்க அந்தப் புது வீட்டிற்குள் நுழைந்தோம்

மண்டபமேடையில் எங்கள் கன்னடத்தோழியின் குழந்தையை திவாகர்  தூக்கி வைத்துக் கொண்டு  ஏதோ கொஞ்சிக் கொண்டிருப்பது கூட்ட நெரிசலில்
தெரிந்தது. தோழி  எங்களுக்குப் பின்னே வாசலில்  வந்த யாரையோ வரவேற்கப் போயிருந்தாள்

திவாகர் அருகில் தோழியின் கணவர் நஞ்சுண்டையா அவனையே முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவரும் பரிசுப்பொருளுடன் மேடை நோக்கி நடந்து போனபோது, திவாகர் குழந்தையிடம்," ஹேய் ஜெய்குட்டி ஜெய்கலாகுட்டி..அழகுசெல்லம்.. என்
தேவதையே..ஜெய்கலாகுட்டி...யே கலா, கலா! கண்ணடிச்சிக் கலக்கறா.."என்று வாய் நிறையக் கொஞ்சிக்  கொண்டிருந்தது கேட்டு நானும் வித்யாவும் அதிர்ந்துபோனோம்

அடப்பாவி திவாகர்! ஜெய்கலா,குட்டியா?

குழந்தையின் அப்பா இப்படி முழிக்கக் காரணம் இதுதானா?

வேகவேகமாய் வித்யா தன் தம்பியை ஒரு ஓரத்திற்குக் கடத்திச் சென்று,:"டேய் மடையா.. என்னடா ஜெய்கலான்னு குழந்தையக்  கொஞ்சறே?" என்று சீறினாள்

"ஏன் அதுதானே குழந்தையோட பேரு? புதுவீட்டுக்கும் அதைத்தானே பேரா வச்சிருக்காங்க?"

"ஐய்யோ..அது குழந்தையோட அம்மா பேருடா..குழந்தை பேரு நிமிஷாம்பா.. அழைப்பிதழ்ல பாக்லயா நீ?"

" ஜெய்கலா மாடர்னா இருக்கே அதுதான் குழந்தை பேருன்னு நினைச்சேன், கொஞ்சினேன்.."

" நிமிஷாம்பா என்கிற தெய்வத்துக்கு வேண்டிப் பிறந்த குழந்தை அதான் அந்தப்பெயரை வச்சிருக்காங்க..நல்லவேளை..என் ·ப்ரண்ட் ஜெய்கலா ஹஸ்பண்ட்டுக்கு தமிழ் தெரியாதோ நீ பிழைச்சியோ? ஆனாலும் தன் ஒய்·ப் பேரையே பயல் திரும்பத்த்ரும்ப சொல்றானேன்னு உன்னையே அவர் முறைச்சிருக்கார்!"

"அப்படியா சாருக்கு தமிழ் தெரியாதா அப்படின்னா இன்னும்  அதிகமாகொஞ்சி இருப்பேனே? அநியாயமா நீங்க ரண்டுபேரும் வந்து கெடுத்துட்டீங்களே?" என்ற
தனது உடன் பிறப்பை உதைக்கத் தயாரானாள் வித்யா!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors