தமிழோவியம்
கவிதை : தகிக்கிறான் ஆதவன்
- ஷைலஜா


வெப்பத்தில் தவிக்கையிலே
வேகமாக எந்தன் நிழல்
நட்புறவாய் ஆதரவாய்
என்னை அணைத்திட்டே
என்னோடு வருகிறது
மாலைக்கதிரவன்
மலைமுகட்டில் சாய்ந்தவுடன்
நிழல் எனக்கு வழிகாட்டியென
நீண்டுமுன்னே செல்கிறது
காலையில் பின் தொடர்ந்து
பகலில் பக்கம்  வந்து
மாலைமயங்கியதும்
மனக்காவலன்போல
சாலையிலே முன் செல்லும்
நிழலோடுமட்டுமே
நிரந்தரமாய்
வாழ்க்கைப்பயணம்

Copyright © 2005 Tamiloviam.com - Authors