தமிழோவியம்
கட்டுரை : பிரபஞ்சத்தின் தோற்றமும், பெருவெடிப்பும் - 2
- சீனு

(சென்ற வார தொடர்சி)

பிறகு ஐன்ஸ்டின் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செய்தது (ஒரு மாறிலியை சேர்த்தது) தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம், 1929-ல் ஹப்பில் தன்னுடைய தொலை நோக்கி மூலம்  இந்த அண்டம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று  நிரூபித்தார்.

இது ஒரு முக்கியமான ஒரு மைல் கல். அண்டத்தின் தோற்றம் குறித்த கணிப்புகளை தலைகீழாக புரட்டிப் போட்டது. இந்த அண்டம் விரிந்து கொண்டிர்ப்பதால்,  இப்போதிருக்கும் சூழலை வைத்து பின்னோக்கி நகர்ந்தால் இருபதினாயிரம் மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த அண்டத்தில் உள்ளவையாவும் ஒரு கட்டத்தில் ஒன்றாக  இருந்திருக்க வேண்டும் அல்லவா? இப்படி ஒன்றாக இருப்பதற்கு பெயர் சிங்குலாரிட்டி (Singularity). அதாவது ஒருமை. அதன் பின் ஏற்பட்ட ஒரு வெடிப்பு தான் பெரு வெடிப்பு. உண்மையில்  பார்த்தீர்களானால் எந்த வெடிப்பு என்பது ஏற்படவில்லை There was a state  of rapid expansion. இதைத் தான் பெருவெடிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். அதன் பின் தான் இந்த அண்டம் பல்கிப் பெருகி இருக்க  வேண்டும் என்று கணித்தார்கள். ஆனால் சிங்குலாரிட்டியில் இந்த அண்டம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை, அறிவியல் விதிகளால் விளக்க முடியவில்லை. ஆனால் Expansion(Big bang)  ஆரம்பித்து 10^ -45 செகண்ட் கழித்து எப்படி இருந்தது என்பதைக் கணிக்க முடிகிறது. என்னதான் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தாலும், அவற்றுக்கு ஒரு  முடிவு உண்டு. இந்த முடிவை எடுப்பது, அந்த அந்த கண்டுபிடிப்புக்களில்
நாம் பயன்படுத்தும் மாறிலிகள். உதா, ஒளியின் வேகத்தை நாம் பல சமன்பாடுகளில் உபயோகிக்கிறோம். Big bang  ஆரம்பித்து 10^ -35 செகண்டில் கூட ஒளியின் வேகம் இப்போதைய ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருந்திருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள். ஆனால், இப்படி மாறிலிக்களை  உபயோகிப்பது சிங்குலாரிட்டியால் செயல் இழக்கப்படும். காரணம், இந்த மாறிலி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது மாறிலிக்களாஅக இல்லாமல் போகலாம். அப்பொழுது அறிவியலின் அனைத்து விதிகளும் உடைக்கப்பட்டுவிடும். இது அறிவியலுக்கு பெருத்த அடியாக விழும். அதனால், அறிவியலால் மட்டும் இந்த அண்டத்தின் தோற்றத்தை கணிக்க  முடியாது. அதனால் அறிவியலை மட்டுமே நம்ப முடியாது. அறிவியலால் சொல்லக்கூடியது "அண்டம் இப்படி இருக்கிறது, காரணம் அது அப்படி தான் இருந்தது" என்பதை தவிற வேறில்லை. இந்த  நிலையை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. [படம் "Singularity"] சரி! போன பத்தியில் தான் தலைப்பிற்கே வந்தோம். அதாவது பெரு வெடிப்பு.

சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு தீப்பிழம்பு இருந்திருக்கிறது. தீப்பிழம்பு என்பது எதோ மிகப் பெரிய ஒரு பொருள் போல் படுகிறது. சிங்குலாரிட்டியின் போது பிரபஞ்சத்தின் அளவு புரோட்டான் என்பதை  விட சிறியதாக இருந்திருக்கும் ஆனால் அந்த அளவு சிறிதாக இருந்தாலும் அதன் எடை பலபலப் பில்லியன் டன்னாக இருந்திருக்கும். அதன் அடர்த்தி அளவிடமுடியாததாக இருந்தது.  இந்த தீப்பிழம்பு வெடித்தபொழுது உருவானது தான் இந்த அண்டம் என்னும் கோட்பாடே "பெரு வெடிப்பு" கோட்பாடாகும். நியாயமாக பார்த்தால் அது "Biggest Bang"-ஆக இருந்திருக்க வேண்டும்.  இந்த கோட்பாடு உருவானதற்கு முக்கிய காரணம் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble).

(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors